24 special

56 அங்குல மார்பு....! சர்ச்சையை கிளப்பும் பெண் எம்பி..!

Mamata banerjee , modi,  mahua moitra
Mamata banerjee , modi, mahua moitra

மேற்குவங்கம் : திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த மக்களவை எம்பியான மஹுவா மொய்த்ரா நேற்று தனியார் செய்தி ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு 56 அங்குல மார்பை வைத்துக்கொண்டு அதை தினமும் அடித்து வலிமையான தலைவர் என காட்டிக்கொள்ளவேண்டியதில்லை என கூறியுள்ளார்.


கொல்கொத்தாவில் தனியார் செய்தி ஊடகம் நடத்திய ஜனநாயக சொற்பொழிவு இந்திய கூட்டாட்சியின் புதிய அமைப்பு என்ற தலைப்பில் மஹுவா மொய்த்ரா பேசினார். அவர் பேசுகையில் " நவீன் பட்நாயக் ஒரு வலிமை மிகுந்த தலைவர். மம்தா பானெர்ஜி ஒரு வலுவான தலைவர். 56 இன்ச் மார்பை தினமும் அடித்துக்கொண்டு வலிமையான தலைவராக இருக்கவேண்டியதில்லை.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். முதன்முதலாக ஒருகூட்டத்தின் தலைவராக எனக்கு விருப்பமில்லை என அறிவித்தவர் மம்தா பானெர்ஜி. அவர் நாட்டின் பிரச்சினைகளை விவாதிப்போம். பிஜேபியை வலுவாக எதிர்ப்போம் என கூறியுள்ளார். மதம் என்பது தனிப்பட்ட வரம்பில் இருக்கவேண்டும். 

உங்களது தனிப்பட்ட இடத்தில்நான் தலையிடாதவரை அதை நான் அனுமதிக்கவேண்டும். மத்தியில் பிஜேபி தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. 65 ஆண்டுகளாக இருந்த திட்டக்கமிஷன் 2014ல் கலைக்கப்பட்டபோது கூட்டாட்சிமுறைக்கு முதல் அடிவிழுந்தது. மாநிலங்களின் ஒருமித்த உடன்படிக்கையின் அடிப்படையில் மானியங்கள் வழங்கப்பட்டது. 

தற்போது நிதிஆயோக் தனது விருப்பத்தின் அடிப்படையில் மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு செஸ் வரியை அதிகப்படுத்தியுள்ளது. மாநிலங்களின் ஜிஎஸ்டி வரிகளின் பங்குகளை சரியான நேரத்தில் வழங்கவில்லை. கூட்டாட்சியின் தூண்கள் உடைக்க்கப்பட்டுவிட்டன" என மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.  பிரதமர் மோடி 2014 தேர்தலின் போது,

உத்திரபிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட பேரணியில் குஜராத் மாநிலத்திற்கு இணையாக உத்திரபிரதேசம் வளர்ச்சியடைய 56 அங்குல மார்பு பிடிக்கும் என கூறியிருந்தார். அதைக்குறிப்பிட்டு மொய்த்ரா பேசியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.