தமிழகத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் நிலை மறந்தவன், இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 15-ம் நாள் தமிழகத்தில் வெளியாக இருக்கிறது, இந்த திரைப்படம் மதமாற்றத்தை மையப்படுத்தி நடைபெறும் வியாபாரம் குறித்து கூற இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
இந்த சூழலில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஒரு திரைப்படத்தை திரையிட இருப்பதாக செய்தி வெளியானது, அதில், பள்ளி மாணவர்களிடையே கலைத்திறமை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் அரசு பள்ளிகளில் மாதம்தோறும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான படத்தை திரையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதோடு அந்த படம் குறித்த கலந்துரையாடலையும் நடத்துகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை 'சிறார் திரைப்பட விழா' என்ற பெயரில் வகுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அரசின் முடிவை வரவேற்ற நிலை மறந்தவன் திரைப்பட தமிழ் தயாரிப்பாளர் பிரகாஷ் அவர்கள் அவரது முகநூலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் நீங்கள் அரசு பள்ளிகளில் ஒளிபரப்ப, நிலைமறந்தவன் திரைப்படம் ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல் இலவசமாய் தர தயாராக உள்ளோம் முதல்வரே.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என குறிப்பிட்டு இருக்கிறார். நிலை மறந்தவன் திரைப்படம் மட்டும் பள்ளி மாணவர்கள் மத்தியில் திரையிடபட்டால் பல்வேறு நபர்களின் முகத்திரை கிழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.