Tamilnadu

பலரது எதிர்ப்பையும் மீறி விவாதத்தில் பங்கு பெறுவது ஏன் ஸ்ரீராம் சேஷாத்திரி தெரிவித்த 7 காரணங்கள்!

Sriram seshadri
Sriram seshadri

ஊடக விவாதங்களில் பங்கு பெறுவது ஏன் என பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி விளக்கம் அளித்துள்ளார் அது பின்வருமாறு :-நான் ஒரு சேனல்லில் விவாதத்துக்கு பங்கு பெறுகிறேன் என்று பதிவிட்டால், பலர் அது வேஸ்ட், உங்கள் நேர விரையம், உங்களுக்கு சான்ஸ் கொடுக்க மாட்டார்கள், பாஜகவே ஒதுங்கி இருக்கும்போது உங்களுக்கு என்ன, என்று ஆதங்கத்திலோ அல்லது வேறு ஒரு நோக்கத்துடனேயோ பதில் அளிக்கிறார்கள்.


நானும் பல முறை அப்படிப்பட்ட கருத்துக்களுக்கு பதில் அளிக்காமல் இருந்துள்ளேன், ஆனால் சமீபத்தில் இது அதிகமாக வருவதனால், ஒரு விளக்கம் கொடுக்கலாம் என்று நினைத்து இந்த பதிவு 1. விவாதங்களில் பங்கு பெறுவதனால் எனக்கு ஒரு லாபமும் கிடையாது, அப்படி பங்கு பெறுவதற்கு சன்மானம் கிடையாது. ஸ்டூடியோ  சென்றால் போக வர கார் வசதி உண்டு, அங்கு ஒரு காபி அல்லது டி கிடைக்கும் அவ்வளவே. புகழ் கிடைக்குமா என்றால் அதை விட தொந்தரவுகள் தான் அதிகம். அதனால் இவன் புகழுக்கு ஆசைப்பட்டு தான் பங்கு பெறுகிறான் என்றும் கூற முடியாது 

2. இருந்தும் நான் பங்கு பெறுவது, ஒரு மாற்று சிந்தனையை விதைப்பதற்கு மட்டுமே. அதுவும் என் பாணியில் ஆதாரங்களோடு பேச ஆண்டவன் திறமை கொடுத்துள்ளான், வாய்ப்பும் கொடுத்துள்ளான் அதனை நான் சரி வர உபயோக படுத்த வில்லை என்றால் தவறு என்பது ஏன் அபிப்ராயம். என்னை விட இன்னும் ஆதாரங்களோடு பங்கு பெற திறமை உள்ளவர்கள் இருப்பார்கள் அனால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கலாம். அப்படி பங்கு பெற ஆர்வம் உள்ளவர்கள் அணுகினால் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தர முயல்வேன்.

3. ஊடகங்களை உதாசீன படுத்தினால் அவர்கள் TRP  குறையும் அதனால் தவிர்க்கும் படி ஆலோசனை கூறுபவர்களுக்கு, அவர்களுக்கு நானோ, என்னை போன்ற சிலர் மட்டும் இல்லை பலர் வாய்ப்புகளுக்கு காத்து இருக்கிறார்கள், அதனால் ஊடங்கங்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. 

4. பலர் கூறுவது போல ஊடகங்கள் ஒரு தலை பட்சமாக உள்ளது என்பது உண்மையே, அதனால் மட்டுமே புறக்கணிப்பது கோழைத்தனமானது என்பது என்னுடைய கருத்து . நீங்கள் பங்கு பெறும்போது நெறியாளர் குறுக்கிடுவார், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, நேரம் ஒதுக்கமாட்டார்கள் என்பது ஒரு விமர்சனம், இருந்தாலும், தேசிய கடமை ஆற்றும்போது கிடைக்கும் வாய்ப்பை தவர விடுவதும் நியாயமில்லை. ஆனாலும் நெறியாளர்கள் நேரம் கண்டிப்பாக கொடுக்கிறார்கள், குறுக்கீடு இருந்தாலும், என்னுடைய கருத்தை நான் கூற தவறுவது இல்லை 

5. நீங்கள் இன்னும் வலிமையாக, கடுமையாக பேச வேண்டும் என்பது பலர் வைக்கும் விமர்சனம். நான் என்னுடைய வாத திறமை மற்றும் எடுத்து வைக்கும் தரவுகள் ஆதாரங்களை மட்டுமே நம்புகிறவன். குரல் உயர்த்தி பேசுவது குறுகிய கால பலன் அளித்தாலும் நம்பக தன்மை உண்டாக்காது. என்னுடைய அனுபவமும் கூட. பல முறை என்னுடைய எதிர் சிந்தனை உடையவர்கள், என்னை சமூக ஊடகங்களில் காட்டமாக விமர்சிப்பவர்கள் கூட என்னுடைய தரவுகள் தவறு என்று கூறியது கிடையாது, மேலும் அவர்களுக்கும் தெளிவு பிறந்ததாக கூறி இருக்கிறார்கள். மேலும் நான் என்றைக்கும் விவாதங்களில் கண்ணியம் தவற மாட்டேன்

6. பாஜகவே ஊடகங்களை ஒதுக்கும் போது  உங்களுக்கு மட்டும் என்ன தேவை வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு என்னுடைய பதில் நான் கட்சி சார்ந்தவன் கிடையாது. எனக்கு அணைத்து கட்சிகளிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பழக்கம் உண்டு. என்னுடைய கருத்துக்கள் பாஜக சார்ந்து இருப்பது தேசிய சிந்தனையினாலும் RSS பழக்கத்தினாலும்  வந்தது, நான் பல முறை பாஜக முடிவுகளை எதிர்த்துள்ளேன், விமர்சித்துளேன். பாஜக ஊடக விவாதங்களில் பங்கு பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், ஆனால் அதற்கு அவர்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பது என்  அபிப்ராயம்.

7. பிறகு எதற்கு பங்கு பெரும் விவாதங்களை பகிர்கிறாய் என்றால், பொதுவில் உள்ள கருத்துக்களை கேட்டு பெறுவதற்காக மட்டுமே என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீராம் சேஷாத்திரி.