சமீபத்தில் வெளியான புஸ்பா திரைப்படத்தில் மெகா ஹிட் அடித்த பாடல் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடல், சமந்தா நடனத்தில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது, தற்போது இந்த பாடலை அப்படியே உல்டாவாக மாற்றி சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடல் வரிகள் திமுகவை கடுமையாக டேமேஜ் செய்துள்ளது, பொய் சொல்றியா மாமா... பொய்யா சொல்றியா மாமா என தொடங்கிய பாடல் திமுகவின் வாக்குறுதிகளை விமர்சனம் செய்யும் விதமாக அமைந்துள்ளது, 1000 ரூபாய் தர்றேன்னு சொன்னீங்க இப்போ என்ன ஆச்சுங்க என பாடல் தொடங்கிறது.
இந்த பாடல் இப்போது சமூக வலைத்தளமான முகநூலில் வைரலாகி வருகிறது, பாஜகவினர் இதனை பல்வேறு முகநூல் பக்கங்களில் பரப்பி வருகின்றனர், இந்த பாடலுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், உடனடியாக பாடலை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதே நேரத்தில் இந்த பாடலுக்கு தற்போது டப்பிங் செய்து இளசுகள் டப் மாஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது, இணையத்தில் வைரலாகும் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.