24 special

தமிழக அரசியலில் நடக்க போகும் பெரும் மாற்றம்...!இனி எதிர்க்கட்சிகள் கதி அவ்வளோதான்...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

தமிழக அரசியலை மாற்ற ராமேஸ்வரத்தை அண்ணாமலை குறிவைத்த பின்ணணி! ‘என் மண், என் மக்கள்' என்ற பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பாத யாத்திரை 168 நாட்கள் நடைபெற இருக்கிறது. குறிப்பாக இந்த ஒரு பாத யாத்திரை ராமநாதபுரத்தில் தொடங்கி சென்னையில் நிறைவடைய இருக்கிறது. வருகின்ற ஜூலை 28ஆம் தேதி இந்த பாத யாத்திரையானது தொடங்க இருக்கிறது. ஜூலை 28ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த பாதயாத்திரை ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 6 மாதங்கள் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, தொடர்ந்து சென்னையில் ஜனவரி 11-ம் தேதி பாதயாத்திரையை முடிவு செய்கிறார். இந்த ஒரு பாத யாத்திரைக்காக பல்வேறு தரப்பிலிருந்து பாஜக தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.


அதுமட்டுமில்லாத ஜூலை 28ஆம் தேதி அண்ணாமலை அவர்கள் தொடங்க இருக்கும் இந்த ஒரு பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார் என்பதும் இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சம். தென் தமிழகத்திலிருந்து தொடங்கும் இந்த பாதை யாத்திரை யானது தென் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று இறுதியாக சென்னையில் வந்து நிறைவு அடைகிறது. முதன் முதலில் பாத யாத்திரைக்கு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதபுரம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. எதற்கு இராமநாதபுரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம், அதற்கான பதில் இதோ, பழமை வாய்ந்த உலகப் புண்ணியத் திருத்தலமான ராமேஸ்வரம் திகழ்ந்து வருவது உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சீதையை மீட்க ராமபிரான் ராமேஸ்வரத்தில் தான் வழிபாடு செய்ததாகவும், பின்னர் ராவணனை வதம் செய்த பிறகு பாவத்தைப் போக்குவதற்கு இங்கு வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது. அதைப்போல அண்ணாமலை அவர்கள் தொடங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தீயவர்கள் நிச்சயம் தண்டனைக்குட் படுவார்கள். அதற்காக இங்கிருந்து பாதயாத்திரை ஆனது தொடங்கப் பட இருக்கிறது. அது மட்டுமல்லாது பிரதமர் மோடி அவர்களின் தொகுதியான காசி வாரணாசிக்கும் மற்றும் தென் தமிழகத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக தென் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ராமேஸ்வரத்தை குறிவைத்து, நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்குப் பின்புலத்தில் உள்ள தகவல்களை விசாரித்த பொழுது ஆச்சரியமான விவரங்கள் வெளிவந்து இருக்கிறது. சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தின் போது பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தென்னிந்தியாவில் உள்ள தொகுதியில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது, இதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரித்துள்ளனர் எனவும் விரைவில் இது குறித்து டெல்லி தலைமை முடிவெடுத்து அதன் பின்னர் அறிவிக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக ராமேஸ்வரம் தொகுதி தற்போது பிரசித்தி பெற்றிருக்கிறது. தமிழகத்தின் ஆன்மீக சிறப்பு வாய்ந்த தளமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமிழகத்தில் பாஜகவிற்கு மேலும் வலிமை கூடும் எனவே இத்தகைய ஆன்மிக சிறப்பு வாய்ந்த விஷயங்கள் மற்றும் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணம் தொடங்க இருக்கிறது என தகவல்கள் கசிகின்றன.

இந்த பயணத்தின் போது மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலந்துகொண்டு துவங்கி வைக்க இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இந்த நடை பயணத்திற்காக, மாநாடு பந்தல் போடப்பட்ட தற்போது சிறப்பாக வேலைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்த ஒரு நடை பயணத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் தொடக்கவிழா ராமேஸ்வரத்தில் கும்பமேளா நடப்பது போல் இருக்கும் என கமலாலய தரப்பு தகவல்கள் கசிகின்றன.