பவரில் இருப்பவர்களுக்கு இந்த நிலைமையா என்று வியந்து பார்க்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது காரணம் ஆளுங்கட்சியின் அதிக செல்வாக்கும், இரண்டு அமைச்சர் பொறுப்புகளின் வைத்து வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜியின் மீது மேற்கொள்ளப்பட்ட வருமானவரி துறை மற்றும் அமலாக்கத்துறை ரெய்டுகள் அவரின் நிலைமையை பெரிதும் மோசமடைய செய்தது. எந்த அளவுக்கு என்றால் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய முற்படும் பொழுது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு!
அதற்குப் பிறகும் அமலாக்கத்துறை விடுவதாக இல்லை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு எதிராக போராடி செந்தில் பாலாஜியை விசாரணையில் எடுத்து ஆக வேண்டும் என்ற உறுதியில் வென்றே விட்டது! கடைசியாக வந்த நீதிமன்ற உத்தரவின் படி செந்தில் பாலாஜி மருத்துவமனை சிகிச்சை களிருந்து டிஸ்டார்ஜ் ஆனவுடன் அமலாக்கத் துறையின் காவலில் எடுத்துக் கொள்ளப்படுவார், அந்த காலகட்டத்தையே அமலாக்கத்துறையில் விசாரணை காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார் அதற்கேற்ப செந்தில் பாலாஜி தரப்பும் டிஸ்சார்ஜ் ஆனால்தானே விசாரணை எடுப்பீர்கள் என்று காலம் தாழ்த்தி வர தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய கேள்வியின் விளைவு மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகி 108 ஆம்புலன்சில் உடனே புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அடுத்தபடியாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி சம்பந்தப்பட்ட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சோதனை நடத்தியது. அதுவும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு படையுடன் அதிகாரிகள் வந்து இறங்கியது பொன்முடி தரப்பிற்கு இடியே விழுந்தது. அமலாக்கத்துறை இந்த ரெய்டு மேற்கொள்ளும் பொழுது எதிர்கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் பெங்களூர் பயணமாய் இருந்தது தான் அறிவாலயத்தை இன்னும் பயத்தில் தள்ளியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்வரின் மனைவி முருகனை வழிபடுவதற்காக பழனி சென்று 40 நிமிடங்கள் இடைவிடாத பிரார்த்தனை செய்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேற்று முன்தினம் ஆடி செவ்வாய் என்ற காரணத்தினால் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீணாக முருகன் குடி கொண்டிருக்கும் இடமாக பழனி திகழ்வதாலும் அங்கு நடைபெறும் உச்சி கால பூஜைகள் கலந்து கொள்வதற்காக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் பழனி சென்றுள்ளார் பிறகு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, ரோப்காரின் மூலம் காலை 11 20 மணியளவில் முருகன் கோவிலுக்குள் சென்றுள்ளார். துர்கா ஸ்டாலின் உடன் பழனி எம்எல்ஏ மற்றும் செந்தில்குமார் மனைவி மெர்சி கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து 11.50 மணியளவில் கோவில் நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டு 12 30 மணி வரை கோவிலில் முருகனை தரிசித்து வேண்டிய பிறகு ரோப் காரின் வழியாகவே கீழே இறங்கி திரும்பி உள்ளார் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்.
இப்படி தொடர்ச்சியான ரெய்டுகள் மேலும் திமுக பற்றி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்றவை திமுகவின் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கான வழிகளை அடைத்து வருகிற காரணத்தினால் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று குறித்து முதல்வர் மனைவி ஏதேனும் பரிகாரம் செய்யலாமா என யோசித்து பழனி சென்று வழிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாமல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாட்டிலும் ஈடுபட்டார் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்.