Politics

நேர்மையான அதிரடியான வழக்கறிஞர் என்றால் நெத்தியடி உதாரணம்!! மெய்சிலிர்க்கவைக்கும் பாமக பாலு ஹிஸ்டரி!!

நேர்மையான அதிரடியான வழக்கறிஞர் என்றால் நெத்தியடி உதாரணம்!! மெய்சிலிர்க்கவைக்கும் பாமக பாலு ஹிஸ்டரி!!
நேர்மையான அதிரடியான வழக்கறிஞர் என்றால் நெத்தியடி உதாரணம்!! மெய்சிலிர்க்கவைக்கும் பாமக பாலு ஹிஸ்டரி!!

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு என்று பலமான வாக்கு வங்கி உள்ளது. அதை ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் எதிரொலித்தன. அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் பாமக ஜெயங்கொண்டம் தொகுதியை வலியுறுத்தி வாங்கியுள்ளது. இந்த தொகுதியில் அன்புமணி நிற்கப் போவதாக சொல்லப்பட்ட நிலையில், டாக்டர் ராமதாஸும் தனது செல்லப்பிள்ளைகளில் ஒருவரான பிரபல வழக்கறிஞர் பாலுவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார்.


ஆமாம் எப்படிப்பட்டவர் இந்த பாலு? நேர்மையான மற்றும் அதிரடியான வழக்கறிஞர் என்றால் நெத்தியடி உதாரணமாக இருப்பவர் இந்த பாலு தான், இவரை பற்றிய மெய்சிலிர்க்கவைக்கும் பல சுவாரஷ்ய தகவல்கள் பாமகவினரை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் விரும்பவைத்துவிட்டது. எந்த குற்றத்துக்கு வளைந்து கொடுக்காமல், பணத்துக்கு மசியாமல் தான் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருப்பவர். பணத்திற்கு விலை போகி குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடும்  வக்கீலல்ல இவர், வக்கீல் வாழ்க்கைக்கே பக்காவாக ஃபிட் ஆனவர். 

பாமகவில் பொதுச் சேவையில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர் பாலு, மதுவுக்கு அடிமையாகி கணவனை இழந்த பெண்களுக்கு தனது சட்ட உதவிகள் செய்து நிவாரணம் தேடித் தந்துள்ளர். அதுமட்டுமல்லாது, இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில், தன்னார்வ அமைப்புகள் மூலம் பல்வேறு உதவிகள் புரிந்து, பாமக மட்டுமின்றி பலதரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 

தர்மபுரி சம்பவம் முதல் பொன்பரப்பி சம்பவம் வரை திமுகவின் பல்வேறு சதிவேலியை சட்டத்தின் மூலம் உடைத்தெறிந்தவர் பாலு. இதன் பின்னணியில் திமுக உள்ளதென்பதை வெளி உலகத்திக்கு அம்பலப்படுத்தியவரும் இவர் தான்.

அதுமட்டுமல்ல கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவுக்கு கொடுக்கப்பட்டது. சிதம்பரம் தொகுதி வெற்றி வாய்ப்பு இருந்தும் விசிகவோடு மோதல் ஏற்படும், இதை திட்டமிட்டே திமுகவின் செய்கிறது அதற்கு நாம் வழிவிட்டுவிடக்கூடாது என்பதை டாக்டர் ராமதாஸிடம் எடுத்து சொல்லி, எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் தொகுதியை விட்டு கொடுத்து பெரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

திமுக கூட்டணியில் உள்ள விசிகவை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் திமுக நடத்திவந்ததை பகிரங்கப்படுத்தினார். அதேநேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார் என்பதையும் தெளிவு படுத்தினார்.

சாலை ஓரங்களில் இருக்கும் மதுபானக் கடைகளால்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன; பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. நீதிமன்றத்தின் மூலம் ஏதாவது செய்ய முடியுமா பார்’ என டாக்டர் ராமதாஸ்  காரணத்தினால் தனது ஆட்டத்தை தொடங்கினார் வழக்கறிஞர் பாலு, ஆனால் அவர் நீதிமன்றத்தின் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை, ‘தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும்’ என்ற தீர்ப்பும் வந்தது. டாஸ்மாக் விஷயத்தில் ஆரம்பம் முதலே உறுதியாகவும் தீவிரமாகவும் இருந்து வெற்றியும் கண்டவர்.  

இந்த தீர்ப்பினால் அரசுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 60 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இதனால், அரசியல்வாதிகள் நடத்தும் மதுபான உற்பத்தி நிறுவனங்களும் பாதிக்கப்படும். அந்த இழப்பைச் சரிக்கட்ட பலமுயற்சிகள் நடந்தது. ஆனால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். என டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்குத் தொடர்ந்து போராடிவந்தார்.

இன்னும் சொல்ல நிறையவே இருக்கிறது... அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் ஒவ்வொன்றுமே மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் தான்... அப்படித்தான் தனது டீமோடு திமுக போன்ற பெரிய பெரிய கட்சிகளை தனது வாதாடும் திறமையால் தலைதெறிக்க ஓடவிட்டவர்.