Politics

தேர்தல் முடிவையே மாற்றக்கூடிய அதிரடி கடிதம் வெளியானது!! திமுக அதிர்ச்சி!!!

தேர்தல் முடிவையே மாற்றக்கூடிய அதிரடி கடிதம் வெளியானது!! திமுக அதிர்ச்சி!!!
தேர்தல் முடிவையே மாற்றக்கூடிய அதிரடி கடிதம் வெளியானது!! திமுக அதிர்ச்சி!!!

தமிழக தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுகக்கூட்டணி,மக்கள் நீதிமய்யம் கூட்டணி என பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.


பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலில் உண்மையான போட்டி என்பது அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு இடையேதான் அமைந்துள்ளது களத்தில் வெளிப்படையாக தெரியவந்துள்ளது, இந்நிலையில் சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமையச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் மூர்த்தி என்ற புது முகம் ஒருவரை திமுக தலைமை நிறுத்தியுள்ளது, இந்நிலையில் திமுக வேட்பாளர் குறித்தும் அவர் சொந்த கட்சியை சேர்ந்த நபரிடமே இடத்தை ஆட்டையை போட்டதும், வீட்டினை இடித்தது  குறித்த அதிரடி தகவல் கடிதமாக வெளியாகியுள்ளது.

திமுகவை சேர்ந்தஒருவர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் நாங்கள் வசித்து வந்த வீட்டினை மூர்த்தி விலைக்கு கேட்டதாகவும், ஆனால் நாங்கள் மறுக்கவே வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டினை இடித்து விட்டு, மூர்த்தி வீட்டின் கார் பார்க்கிங் ஏரியாவாக அந்த இடத்தை மாற்றியுள்ளதாகவும்.

மூர்த்திக்கு சீட் கொடுக்க கூடாது என தங்கள் தலைமையிடம் முறையிட்டதாகவும் அது நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார், அத்துடன் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் பட்டா இல்லாத பல வீடுகளை சேர்ந்த மக்களுக்கு ஆபத்து எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், சொந்த கட்சியை சேர்ந்த நபரின் வீட்டினை அபகரித்து கொண்டதாக கூறப்படும் மூர்த்தி ஒரு வேலை ராயபுரம் சட்டமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என அதிமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ராயபுரம் தொகுதியில் பல வீடுகள் நிலங்கள் பட்டா இல்லாமல் கூட்டு பட்டா, பொது பட்டா போன்று இருப்பதால், திமுக வேட்பாளர் மீதான குற்றசாட்டு சம்பவமும், கடிதமும் அந்த மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன. திமுகவை சேர்ந்த நபரிடமே கைவரிசையை காட்டிய மூர்த்தி சாதாரண மக்களை விட்டு வைப்பாரா என்ன? என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளன.

இந்த தகவல்கள் ஒட்டுமொத்தமாக பட்டா இல்லாத வீடுகளில் குடியிருப்போரிடமும், தொகுதியில் வசிக்கும் நடுத்தர மக்களிடையேயும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளதால் அவர்கள் திமுக வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது எனவும் இது தேர்தலில் வெற்றியை தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் எனவும் கூறப்படுகிறது.