2024 நாடாளுமன்ற தேர்தல் வர இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில் தெலுங்கானா மாவட்டம் ஹைதராபாத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெற்றது. . மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற 11 மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள் பங்கேற்றுக் கொண்ட நிலையில் 34 பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் அடுத்த அரசியல் முயற்சி தென்னிந்தியாவில் பாஜகவை வலுப்படுத்துவது தான். எனவே ஜே பி நட்டா மாநில தலைவர்களிடம் தென்னிந்தியாவை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பேசுகையில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கு 11 மாநில பாஜக தலைவர்களிடமிருந்து ஆலோசனை கேட்டார். அனைத்து மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் தென்னிந்தியாவில் பாஜக கட்டாயமாக 50 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.. மேலும் இந்த கூட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர்கள் பிஎல் சந்தோஷ், தருண் சுக், சுனில் பன்சால், வி. சதீஷ், தெலுங்கானா மாநில புதிய பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் டிகே அருணா, ராஜ்யசபா எம்பி லக்ஷ்மண், முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கானா பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் பிரதமர் மோடி தென்னிந்தியாவில் போட்டியிடப் போவதாகவும் மற்றும் தென்னிந்தியாவில் பாஜக பலம் பெற வேண்டுமென்றால் பிரதமர் மோடி போட்டியிட்டால் மட்டுமே முடியும் என்று ஆலோசித்த நிலையில் அதனை பாஜக மாநில தலைவர்கள் 11 பேர் ஆதரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது மேலும் விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்தியாவில் போட்டியிடுவார் என்ற அதிகார்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் தனது நடை பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில் ஏற்கனவே அவர் கூறியது போல் உறுதியாக பாஜக தென்னிந்தியாவில் இடம் பிடிக்கும் எனவும் தெரிகிறது.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு தென்னிந்தியாவில் உள்ள பாஜக மாநில தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஆதரவளித்துள்ளனர். ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பாஜக தலைமைக்கு தகவல் கிடைத்த நிலையில் பிரதமர் மோடி அங்கு போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராமநாதபுரத்தில் வெற்றி பெற்றால் தென்னிந்திய மக்களுக்கு பிரதமர் மோடி எங்கள் மண்ணின் எம்.பி என பெருமையாக கூறுவதற்கு காரணமாக அமையும்! அதுமட்டுமில்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த முறை சென்னை வரும்போது கூறியபடி தமிழ்நாட்டிற்கு பிரதமர் வாய்ப்பு என்ற வார்த்தையும் உண்மையாக்கப்படும் என்ற ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியாக தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் தான் என்ற ஆலோசனையை அனைத்து பாஜக முக்கிய தேசிய தலைவர்கள், பாஜக மாநில தலைவர்கள் ஆதரித்த நிலையில் பாஜகவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பெரும் முயற்சியில் பாஜகவினர் ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றனர்.
அண்ணாமலை வருகின்ற 28-ம் தேதி தொடங்க இருக்கும் பாதையாத்திரை நிகழ்ச்சியில் பயன்படுத்த போகும் பிரச்சார வாகனம் பிரதமர் மோடி அவரது தேர்தல் பிரச்சராத்திற்கு பயன்படுத்திய வாகனம் என்றும் அதை அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சியில் பயன்படுத்துக்கொள்ள பரிசாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.