24 special

இது என்ன ஆட்டம்? அடுத்த 6 மாசத்துக்கு ஆடப்போறதுதான் ஆட்டமே..!நடைபயண சரவெடி அப்டேட்ஸ்..!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 29 ஆம் தேதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் “என் மண் என் மக்கள்” என்னும் தலைப்பில் நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவுத்திருந்தார். இந்த நடை பயணத்தை தொடக்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் கட்சியில் உள்ள முதல் முக்கிய பனிரெண்டு அமைச்சர்களின் சொத்து பட்டியலை திமுக பைல்ஸ் 1 என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட நிலையில் அது திமுகவினருக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது! அடுத்த கட்டமாக திமுக பைல்ஸ் டூ என்ற திமுகவின் இரண்டாவது சொத்து பட்டியலை வெளியிட்ட பிறகு தான் தனது பயணத்தை தொடங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். 

இதனால் மக்கள் அனைவரும்  அண்ணாமலையின் நடைப்பயணத்தை எதிர்பார்த்த நிலையில் திமுகவினர் அண்ணாமலையின் இரண்டாவது சொத்து பட்டியலில் என்ன இருக்கிறதோ என்ற அச்சத்தில் உள்ளனர்.மேலும் அண்ணாமலையின் பயணம் குறித்து பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக பாஜக தலைவர் மதிப்பிற்குரிய ஐபிஎஸ் அண்ணாமலை அவர்கள் வருகின்ற 28. 7. 2023 அன்று ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தனது நடை பயணத்தை தொடங்கி 11 .1. 2024 அன்று சென்னையில் அந்த பயணத்தை நிறைவு செய்ய இருப்பதாகவும்  மேலும் அண்ணாமலையின் நடைப்பயணத்தின் போது எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறைடம் பாதுகாப்பு கேட்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் மற்றும் இயற்கை சூழல்கள் மாறும் போது அதற்கான பாதுகாப்பையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் என்ற தகவலை செய்தியாளர் சந்திப்பில்  அறிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணம் என்பது தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் எழுச்சிக்காகவும் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதாகவும்,  மேலும் கிராமப்புறங்கள் நகர்ப்புறங்கள் மற்றும்  சென்னை போன்ற பெரிய மாவட்டத்தில் கூட அண்ணாமலைக்கு இளைஞர்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளிக்கூடம் மாணவர்கள் கூட அண்ணாமலையின் பேச்சைக் கேட்க குவிந்துவருகின்றனர் இதன் காரணமாக இந்த நடைபயணம் தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என பாஜகவினர் நம்புகின்றனர்.  

மேலும் அண்ணாமலை எந்தெந்த ஊர்களில் எத்தனை நாட்கள் இருப்பார் மற்றும் எந்த சாலை வழியாக செல்கிறார் என்பதையும் அந்த ஊரில் உள்ள கமிஷனர் மற்றும் எஸ்பியுடன் கலந்து ஆலோசித்துஅந்தந்த காலகட்டத்தில்  அண்ணாமலை வெளியிடுவார் என்ற திட்டத்தை ஒரு அணி கச்சிதமாக செய்துவருகிறது.. மேலும் இந்த நடைபயணம் என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் இந்த நடை பயணத்தில் மக்களை நேரடியாக சந்திக்கும் இடத்தில் நடைபயணமாகவும் மற்றும் தொலைதூரம் பயணிப்பதற்கு காரை பயன்படுத்துவதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் இந்த பாதையாத்திரையில் 5000 பேர் தொடர்ந்து பயணிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும்  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த நடைபயணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று . அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கும் நிலையில் பாஜகவினர் பெரும் உற்சாகத்துடன் இருக்கின்றனர் மேலும் அமித்ஷா நடை பயணத்தை தொடங்கி வைப்பது பெரிதும் மகிழ்ச்சியை பாஜகவினர் இடையில் ஏற்படுத்தி உள்ளது. இதுநாள் வரையில் அண்ணாமலையின் அரசியல் மிதமான வேகத்தில் சென்றது ஆனால் இப்போதான் வேகமெடுக்க ஆரமித்துள்ளது என்றும் இந்த நடைப்பயணத்தில் இன்னும் பல அரசியல் சரவெடி திருப்புமுனை ஏற்படும் என்றும் கமலாலய வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.