24 special

புட்டு புட்டு வைத்த உளவுத்துறை ..! புலம்பியபடியே கூட்டத்தை கூட்டும் அறிவாலயம்...!

Mkstalin
Mkstalin

சமீபத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக கலந்து கொண்டு திரும்பியதற்கு பின்னால் திமுகவின் தலைமையின் நடவடிக்கை மாறியது குறிப்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் திமுக தலைமை எதிர்பார்த்த அளவு திருப்தியாக நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவித்த நிலையில், இனி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தமிழகத்தில் வீழ்த்தி வெற்றி பெற வேறு மாதிரி முயற்சிக்க வேண்டும் என திமுக தலைமை முடிவு செய்து காய்களை நகர்த்தி வருகிறது. அதன் காரணமாக சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றவும் திமுக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இதற்கெல்லாம் முடிவு எடுப்பதற்காக தலைமை ஏற்கனவே கூடி பேசிய நிலையில் தற்போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்பிகளை அழைத்து கூட்டமிட திமுக தலைமை திட்டமிட்டு அதன்படி கூட்டத்தையும் கூட்ட உள்ளது. 


திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடும் கூட்டம் வரும் ஜூலை 14ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த கூட்டம் சென்னை அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பின்னணியை விசாரித்த போது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன அதாவது தற்பொழுது பாஜக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் பாஜக கூட்டணி கணிசமான தொகுதிகளை பெற இருப்பதாக உளவுத்துறையின் மூலம் ரகசிய அறிக்கை ஆளும் கட்சிக்கு கிடைத்ததாகவும் இதன் காரணமாக வரும் தேர்தலில் திமுகவிற்கு இருக்கும் பின்னடைவை சமாளித்து எப்படியும் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும் எனவும் அறிவாலய தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இப்படி அதிருப்தி அதிகமாக வீசுகிறது என்ற உளவுத்துறையின் அறிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதி எம்பிக்கள் கடந்த முறை வெற்றி பெற்று தொகுதியில் என்னென்ன செய்தார்கள் என்பதை அறிக்கையாக கேட்கிறதாம் திமுக தலைமை, மேலும் இந்த முறை புதிதாக பல வேட்பாளர்களை நிறுத்தவும் தலைமை முடிவு செய்துள்ளது இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கடந்த முறை வெற்றி பெற்ற எம்பிக்களை கூட்டத்திற்கு அழைத்து இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். இன்னும் பத்து மாத காலம் உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்ன செய்ய வேண்டும் என பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றனவாம், மேலும் சில எம்.பிக்களின் செயல்பாடுகள் வேறு தலைமைக்கு பிடிக்காத காரணத்தினால் அவர்களுக்கு இந்த முறை கல்தா கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

முன்னதாக தேசிய அளவில் தான் நாம் தான் பிரதமரை முடிவு செய்யும் சக்தியாக இருப்போம் என ஆர்வமாக பாட்னா சென்று வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம் பெருத்த ஏமாற்றம் அளித்ததாகவும், மேலும் இரண்டாவது கூட்டமும் இன்னமும் தேதி முடிவாகாத நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கடந்த முறை 38 தொகுதிகள் வெற்றிபெற்றது போன்றே இந்தமுறையும் அதிக அளவில் தொகுதிகள் வெற்றிபெற வேண்டும் என்பதே திமுக தலைமையின் எண்ணமாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளுக்கு இந்தமுறை குறைந்த தொகுதிகள் ஒதுக்கிவிட்டு அதிக தொகுதிகளில் திமுகவே நிற்க முடிவு செய்திருப்பதாகவும், இதனால் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்றும் தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.