எட்டு நாளாக தொடரும் ரெய்டு பற்றிய பகீர் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்களில் வருமான வரி துறையினர் கடந்த எட்டு நாட்களாக அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோருக்கு நெருக்கமான இடங்களில் வருமானவரித்துறையினர் பல கோப்புகளை கைப்பற்றியது, பல ஆடியோ ஆதாரங்கள் சிக்கியது மட்டுமல்லாமல் சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் வருமானத்திற்கு அதிகமாக பணத்தை பரிவர்த்தனை செய்தது, கொடுத்து, வாங்கியது போன்ற பல விவரங்களை சேகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது மட்டுமல்லாமல் வருமானவரித்துறை அதிகாரிகளை தங்கள் பணியை செய்ய விடாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தடுத்ததும், தாக்கியதும், அவர்களிடம் அத்துமீறியதும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் என் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வருமான வரித்துறையினர் அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வீடுகளில் நடந்து வரும் ரெய்டில் வந்து கலந்து கொள்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மட்டுமல்லாமல் இன்றுடன் வருமானவரித்துறையினர் நடத்தி வரும் ரெய்டு எட்டாவது நாளை எட்டியுள்ளது மேலும் இந்த ரெய்டு இன்னும் சில நாட்கள் நடக்கும் எனவும் தெரிகிறது.
டாஸ்மாக் பார்களை சட்டவிரோதமாக ஏலம் எடுத்தது, டாஸ்மாக் பாட்டில்களை சப்ளை செய்யும் டிரான்ஸ்போர்ட்களில் நடந்த முறையற்ற டெண்டர், டாஸ்மாக் பார்களை ஏலம் விட்டதில் நடந்த முறையற்ற டெண்டர், மேலும் டாஸ்மாக் மது கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வைத்து விற்க சொல்லி அதனை கரூர் கம்பெனி வசூலித்து வந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருங்கிய அவர்கள் மீது வைக்கப்படுகிறது. மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதிலும் இல்லை.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்தே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை எட்டு மாதம் வருமானவரித்துறை கண்காணித்ததாகவும், தற்பொழுது நடந்து வரும் ரெய்டு காரணமாக அவரது மாமியாரை ஐந்து நாட்களாக காணவில்லை எனவும் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனியார் youtube தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியதாவது, 'செந்தில் பாலாஜியின் வீட்டில் நடந்து வரும் ரெய்டு திங்கட்கிழமை முடிவு பண்ணி வெள்ளிக்கிழமை நடந்த கதை இது கிடையாது இது எட்டு மாசமா அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர் வருமானவரித்துறையினர். அவர் எங்கெங்கு போகிறார், என்னென்ன பன்றார், யார் யாரை சந்திக்கிறார், யார் யாரிடம் எல்லாம் பேரம் பேசுகிறார், யார் யாரிடம் எல்லாம் வியாபாரம் பேசுகிறார், யார் யாரிடம் பேசுகிறார், அவர்களது பினாமி யார் என்பதை 8 மாத காலமாக வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு இறங்கியுள்ளனர், ஓரிடத்தில் ரைடு நடக்கும் பொழுது அங்கு நடக்கும் ஆவணங்கள் மூலம் அடுத்த இடத்தின் பற்றிய துப்பு கிடைக்கிறது அதனால் இந்த ரெய்டு நீண்டு கொண்டே செல்கிறது. இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜியின் ஊரில் சென்று நான் விசாரித்தேன், அவர் ஒன்னும் பரம்பரை பணக்காரர் கிடையாது அவர் முதன் முதலில் ஒப்பந்தம் எடுக்கும் பொழுது அவரிடம் காசு இல்லாத காரணத்தினால் தன்னுடைய இருசக்கர வாகனத்தை அடகு வைத்து தான் 20,000 செட்டில் செய்து இருக்கிறார் அந்த அளவிற்கு செந்தில் பாலாஜி மிகவும் சாதாரண பொருளாதார பின்புறம் உடையவர்.
ஆனால் இன்றைக்கு கரூரில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புள்ள நிலத்தை வைத்து வீடு கட்டுகிறார். இந்த நிலத்தை கொடுத்தது யார் என்று கேட்டால் எனக்கு மாமனார் வீட்டில் இருந்து கொடுத்தார்கள் எனக் கூறுகிறார் ஆனால் நான் அதை விசாரித்துவிட்டேன் மாமனார் வீட்டிலும் பெரிய அளவில் பொருளாதார பின்புலம் கிடையாது, அந்த நிலத்தை விற்றவர்கள் தற்பொழுது அயல்நாட்டில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஒரு சாதாரண பொருளாதார பின்புறம் இல்லாத ஒரு ஆள் எப்படி அந்த அளவிற்கு நிலத்தை தானமாக பெற முடியும்?
இது மட்டுமல்லாமல் இன்னொரு தகவலையும் கூறுகிறேன் செந்தில் பாலாஜி தனக்கு இந்த நிலம் தனமாக கிடைத்தது என கூறி வருகிறார், அது தனது மாமியார் வீட்டில் இருந்து கொடுத்தது எனக் கூறி வருகிறார் ஆனால் இதனை விசாரிக்க வருமான வரி துறையினர் முயற்சி செய்த பொழுது அவரது மாமியாரை நெருங்க முடியவில்லை காரணம் அவரது மாமியார் ஐந்து நாட்களாக எங்கு இருக்கிறார் எனவே தெரியவில்லை நானும் எனக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் விசாரித்து பார்த்து விட்டேன், வருமானவரி துறையினர் அதிகாரிகளும் அவர்களுக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் விசாரித்து பார்த்து விட்டார்கள் ஆனால் எங்கிருக்கிறார் என தெரியவில்லை இப்படி தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி பற்றிய திடுக்கிடும் தகவல்களை சவுக்கு சங்கர் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.