சென்னை மேயர் பிரியா முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கி கொண்டு சென்றதை தனது கிரிக்கெட் ஆசையுடன் ஒப்பிட்டு பிரியாவிற்கு பாராட்டு பத்திரம் வாசித்த திமுகவை சேர்ந்த சல்மா இப்போது மூக்கு உடைப்பட்டு நிற்கிறார். அதிலும் அவரது ட்விட்டர் பக்கம் அதிரும் சம்பவம் அரங்கேரி இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த வாகனம் திடீரென புறப்பட்டுச் சென்ற நிலையில், சற்றும் எதிர்பார்க்காத சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் முதல்வருக்கு பாதுகாப்பிற்காக சென்ற கான்வாயில் வேக, வேகமாக ஏறி பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு வரும் மேடையில் தொற்றிக் ஃபுட்போர்டு அடித்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் வாகனத்தின் பின்னால் சிறிது தூரம் ஓடி வந்து ஏறிக்கொண்டார். இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பார்த்த பொதுமக்கள் அனைவருமே மதிப்பிற்குரிய பதவியில் உள்ள பெண் மேயர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியை இப்படித் தான் நடத்துவதா என கடுமையாக விமர்சித்தனர்.
முதல்வருக்கு முன்பாக குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டும். முதல்வருக்காக காத்திருக்கும் சூழல் உண்டாக்க கூடாது என்பதால் வாகனத்தில் தொங்கியபடி சென்றதாக பிரியா தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்தாலும். தலைமையிலிருந்து மேயர் பிரியாவுக்கு சரியான திட்டமிடல் இல்லாமல் எந்த செய்தியாளர்களும் சந்திக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுவே பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மேயர் முதல்வர் கான்வாயில் தொங்கிக் கொண்டு சென்றிருந்தால், பெண்ணியம் பேசுபவர்களும், சமூக ஆர்வலர்கள் , திமுக அதன் கூட்டணி கட்சிகள் பெண்களை இழிவு படுத்தி விட்டார்கள் என்று தமிழகத்தில் போராட்டமே நடத்தி இருப்பார்கள் .
முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களும் சென்ற காட்சி அதிர்ச்சியளிக்கிறது, மேயர் பிரியா வாகனத்தில் தொங்கி கொண்டு சென்றதை கூட நம்மால் கடந்து சென்று விட முடியும்.
ஆனால் IAS அதிகாரி ஒருவர் வாகனத்தில் தொங்கியபடி சென்றுள்ளது அவரின் அந்தஸ்துக்கு, பணியின் கௌரவத்திற்கு உகந்ததல்ல. முதலமைச்சரின் வாகனத்திலோ, தன் வாகனத்திலோ அவர் சென்றிருக்க வேண்டும். முதலமைச்சருக்கு தெரிந்து இந்த நிகழ்வு நடந்திருக்குமானால் துரதிர்ஷ்டவசமானது. தெரியாமல் நடந்திருந்தால் முதலமைச்சர் கண்டிக்க வேண்டிய நிகழ்வு இது என்று தமிழக பாஜகவினர் கண்டித்து வந்த நிலையில்,
மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல, அதை மேயர் பிரியாவின் துணிச்சலாக பார்க்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், கவிஞர் சல்மா தன் பங்குக்கு இது போன்ற மனதின் குதூகலங்கள் பிறருக்கு புரியாது.
நான் இன்று கூட தெருவில் பிள்ளைகள் கிரிக்கெட் அல்லது பூப்பந்து விளையாடினால், பேட்டை வாங்கி சிறிது நேரம் விளையாடிவிட்டு தான் செல்வேன.keep going டியர் என்று மேயர் பிரியாவுக்கு ஆதரவாக அவர் முதல்வர் கான்வாயில் தொங்கிக்கொண்டு செல்லும் போட்டோவை வெளியிட்டு ஆதரித்து உள்ளதும்,
திமுக தொண்டர்கள் மற்றும் திமுக ஆதரவு கட்சி தொண்டர்களும் தங்கள் பங்குக்கு, சோசியல் மீடியாக்களில் பிரியாவின் செயலை வீர தமிழச்சியின் அடையாளம் என புகழ்ந்து வருவதும்,
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக மேயர் பிரியாவிற்க்கு ஆதரவாகவும் எதிராகவும் இன்னும் சோசியல் மீடியாக்களில் முதல்வர் கான்வாயில் தொங்கி சென்ற சர்ச்சையும் சலசலப்பும் அடங்காமல் வைரலாகி வருகிறது.
மேயர் பிரியாவுக்கு ஆதரவாக சிலர் தங்கள் கருத்துக்களை தங்கள் பங்குக்கு வெளியிட்டு வந்தாலும், பொதுமக்கள் பலர் பாதுகாப்பு கான்வாய் என்பது பிரதமர் மற்றும் முதல்வர்கள் பாதுகாப்பு கான்வாயில் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே அவர்களின் பாதுகாப்புக்காக அவசர காலத்தில் தொங்கி செல்ல வேண்டும்.
அதற்காக அமைத்த மேடையில அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் சுயநலனுக்காக இப்படி செய்வது வெட்கக்கேடானது, சமுதாய சீர்கேடு என காட்டமாக விமர்சிக்கின்றனர்.
மேலும் இதே போல நாங்கள் பஸ்களில் தொங்கிக்கொண்டு சென்றால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? அபராதம் விதிக்க மாட்டார்களா ? இதை ஆதரித்து பதிவு போடுபவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்கலில் தொங்கி கொண்டு செல்லும் மாணவர்களை எப்படி கண்டிப்பார்கள் ? இப்படி ஒரு சம்பவம் இனிமேல் நடக்காமல் முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா, மேயர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியை கண்டிப்பாரா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேயர் பிரியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கவிஞர் சல்மாவின் ட்விட்டர் பக்கத்தில் அவரது கருத்துக்களை கடுமையாக கண்டித்து எதிர் தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர், என்ன கிரிக்கெட் விளையாடுவதும், காரில் தொங்கி கொண்டு செல்வதும் ஒன்றா? நாளை பள்ளி மாணவர்கள் இவர்களை பார்த்து தொங்கி கொண்டு பஸ்ஸில் பயணம் செய்ய மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் என ட்விட்டர் வாசி நடராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் மூக்கு உடைந்து போயிருக்கிறார் சல்மா.
கட்சியினர் தவறு செய்தால் அதை சுட்டி காட்ட வேண்டுமே தவிர கண்ணை மூடி கொண்டு ஆதரிக்க கூடாது எனவும் முறையான பதிலடி சல்மாவிற்கு அவரது ட்விட்டர் பக்கத்திலேயே கிடைத்து இருக்கிறது.