24 special

என்னமா இப்படி பண்றீங்களேமா... மீண்டும் முதல்வரின் தூக்கத்தை கெடுத்த சொந்தக்கட்சிக் காரர்கள்..!

Annamalai, kanimozhi
Annamalai, kanimozhi

ஏற்கெனவே ஏகப்பட்ட தலவலி. தமிழ்நாட்டுல அரசு ஆஸ்பத்திரில ஒவ்வொரு ஆஸ்பத்திரில ஒவ்வொரு பிரச்சனை. போதாத குறைக்கு மினிஸ்டருங்க ஒருத்தருக்கொருத்தர் குறை சொல்லி திட்டிக்கறாங்க. இப்படி ஸ்டாலின் தூக்கத்த கெடுக்க தினம் ஒரு ட்ராமா . இப்போ புதுசா ஒரு பிரச்சனை.வாங்க பாக்கலாம்……


சிவகங்கை  பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமா ஐம்பது கடைகள் இருக்கு. சில தினங்களுக்கு முன்னாடி அங்கே ஒரு கடையில் காஸ் சிலிண்டர் வெடிச்சு விபத்து நடந்திருக்கு. சிவகங்கை நகராட்சிக்கு இந்த ஏரியால இருக்கிற கடைகள் முறையா அனுமதி பெறாம காஸ் சிலின்டர் வச்சு கடை நடத்தறாங்கன்னு, பயணிகளுக்கு இடையூறாக இருக்கிறதுன்னு  புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. 

இதை தொடர்ந்து நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகராட்சி நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலர் திலகவதி தலைமைல நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்துக்கு போய் ஆய்வுகளை மேற்கொண்டாங்க. இதுக்கப்புறம் அங்க வரி கட்டாத கடைகளுக்கு சீல் வச்சு, ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்காங்க. 

இந்த சமயத்துல திமுக கட்சி பிரமுகர் சுந்தரபாண்டி அங்க வந்து திலகவதி கிட்ட வாக்குவாதம் பண்ணி இருக்கார். திலகவதி கிட்ட என்னுடைய பொருட்கள் மேல கை வச்சா அடிப்பேன்னு சொன்னதா அங்க கூடி இருந்து போட்டோ பிடிச்சுகிட்டு இருந்த மக்கள்ல சிலர் சொல்றாங்க. 

நம்ம மக்கள்ல யாரோ வீடியோவ வெளியிட்டு இருக்காங்க. அதுல இவரு அந்தம்மாவ மிரட்டுறது வெளியாகி இருக்கு. என்ன கொடுமைன்னா, போலீஸ்காரங்க பக்கத்துல நின்னு பாத்துக்கிட்டு இருக்காங்க. இங்க தான் ட்விஸ்ட். பாண்டீஸ்வரி மேடம் “ நான் பாக்கத்தான் சீல கட்டிக்கிட்டு இருக்கேன், மோசமான சாக்கட நான்னு  அவங்க சொல்றதும், திமுகவுல உட்கட்சி பூசல் மட்டுமில்ல கடைநிலை வரைக்கும் கேவலமா நடந்துக்கறாங்கன்னு நல்லா தெரியுது.

பாண்டீஸ்வரி சிவகங்கை மாவட்ட காவல் நிலையத்துல தான் வேலை செய்யுற அரசு கட்சி பிரமுகர பத்தி புகார கொடுக்கவும், போலீஸ் அந்த பிரமுகர் மேல 3 பிரிவுகள்ல விசாரணை நடத்தவும் ஆரம்பிச்சு இருக்காங்க. இது என்னடா, ஓயாத தொடர்கதையா, போய்ட்டே இருக்கே. எங்க தொட்டாலும் திமுக அடிதடி.

என்ன வேடிக்கைன்னா, அவங்க கட்சி ஆளுங்களே அவங்க அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாம தடுக்கறது மட்டும் இல்லாம கொலை மிரட்டல் விடறதும்,அரங்கேறியிருக்கு. உதய் அண்ணா, கனிமொழி அக்கா, எங்க போச்சு உங்க பேச்செல்லாம். பாவம், ஸ்டாலினுக்கு ஒவ்வொருத்தனும் தூக்கத்த கெடுக்கவே காத்திருக்காங்க அப்படின்னு வீடியோ எடுத்த அந்த வீடியோவ பாத்த பொது மக்களும் கழக கண்மனிகளும் சொல்றாங்க.