பாஜகவினர் தொடர்ச்சியாக திமுகவினரை விமர்சனம் செய்து வந்தாலும் கனிமொழி மீது கடுமையான விமர்சனங்களை அரசியல் ரீதியாக வைத்தது இல்லை, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர்கள் மீதான விமர்சனத்தில் 10-ல் ஒரு சதவிகிதம் கூட கனிமொழி மீது வைத்தது கிடையாது.
ஆனால் இந்த முறை அண்ணாமலை வைத்த விமர்சனத்தை தொடர்ந்து அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறது கனிமொழி தரப்பு அந்த அளவு வெளுத்து எடுத்து இருக்கிறார் அண்ணாமலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.,
"நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும்போது, சமஸ்கிருதத்திற்கு 638 கோடி ஒதுக்கி இருக்கிறீர்கள், தமிழுக்கு ஏன் இவ்வளவு தொகை ஒதுக்கவில்லை என்று கேட்கிறார்!
கனிமொழி அவர்களே...நாட்டில் மொத்தம் 18 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உள்ளன. மோடி அரசு 2014-இல் பதவியேற்பதற்கு முன்பு, நீங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுக்குடித்தனம் நடத்திய காலத்திலேயே, 17 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் இருந்தன.
ஆனால், தமிழுக்கென்று ஒரேயொரு பல்கலைக்கழகம்தான் உள்ளது. அதுவும் ப எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1981-இல், தஞ்சையில் நிறுப்பட்ட பல்கலைக்கழகம் மட்டுமே! உங்கள் அப்பா, அண்ணா காலங்களில் ஒரு தமிழ் பல்கலைக்கழகம் கூட உருவாகவில்லை என ஒரே போடாக போட்டார் அண்ணாமலை.
நாளைக்கே ஒரு ஐந்து பல்கலைக்கழகங்களை தொடங்கி விட்டு நிதி ஒதுக்கீடு கேளுங்கள். பிரதமர் செய்யத் தயாராக இருக்கிறார்!" என்று பேசினார்.
இந்த மேடை பேச்சு குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது,அதிலும் 2014-க்கு முன்பு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு குடித்தனம் நடத்திவிட்டு என அண்ணாமலை பேசியதுதான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் தமிழ் என பேசிவந்த கனிமொழி உள்ளிட்டோருக்கு முதலில் தமிழ்நாட்டில் எத்தனை தமிழ் பல்கலைகழகங்கள் இருக்கிறது அதை யார் உருவாக்கியது பாருங்கள் என பாஜகவினர் எழுப்பிய கேள்வியால் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறதாம் கனிமொழி தரப்பு.