24 special

மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீரென சொன்ன ஒரு வார்த்தை…!

Stalin ,Senthilbalaji
Stalin ,Senthilbalaji

நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக வரக்கூடிய தகுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொழுத்திப்போட்டது கூட்டணி கட்சிகளிடையே கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் அந்த கூட்டணிக்கு என்னென்ன மாதிரியான சிக்கல்கள் எழும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்... 


2019ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது ராகுல் காந்தி தான் எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என கெத்தாக அறிவித்த மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியைப் பற்றி வாயே திறக்காது கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பத்தை உருவாக்கியது. ச்சே... மோடியை எதிர்க்க ராகுல் தான் சரியான தலைவர் என்றாவது ஸ்டாலின் சொல்லியிருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைகள் அங்கலாய்த்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போது தான் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிருந்தும் எண்ணத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக செய்திகள் வெளியானது. 

அதன் வெளிப்பாடாக தான் நான் நீண்ட காலமாகவே தேசிய அரசியலில் இருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்தனர்.அதனை நிரூபிக்கும் வகையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசியிருப்பது, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர் என மு.க.ஸ்டாலினை புகழ்ந்த செந்தில் பாலாஜி, “கொடுத்த காசுக்கு மேல கூவுறான் டா கொய்யா”  என்பது போல்... நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என போட்டார் பாருங்க ஒரு போடு... காங்கிரஸுக்கு பேரதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது. 

இதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆசைப்படாததையா, ஸ்டாலின் ஆசைப்பட்டுட்டாரு என உடன் பிறப்புகள் கருத்து கூறினாலும், ஜெயலலிதாவிற்கு ஒர்க்அவுட்  ஆன அளவிற்கு கூட ஸ்டாலினுக்கு இந்த பிரச்சாரம் ஒர்க் அவுட் ஆகாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அப்படி என்ன தான் சிக்கல் என விசாரித்தால், இந்தியாவில் 80 சதவீத வாக்குகள் இந்துக்களுடையது, அப்படியிருக்க திமுகவோ எந்த ஒரு இந்து பண்டிக்கைக்கும் வாழ்த்து சொல்ல மாட்டேன் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளது. இது வட இந்தியாவில் எடுபட வாய்ப்பில்லை என அடித்துக்கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

போதாக்குறைக்கு ‘இந்தி தெரியாது போடா’ என எழக்காரம் செய்தது... வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் போன்ற சர்ச்சைகள் வட மாநில மக்களை திமுக மீது கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏன்? 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரே பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்தது உண்மை எனத் தெரிவித்தது, திமுக மீதான அகில இந்திய பார்வையையே மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. 

வட மாநில மக்களைப் பொறுத்தவரை திமுக ஒரு இந்தி மற்றும் இந்து எதிர்ப்பு கட்சி, பிற மாநிலத்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஸ்டாலின் எப்படி ஒட்டுமொத்த இந்தியர்களும் ஏற்கக்கூடிய தலைவராக மாற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையில், நாங்கள் வெற்றி பெற்றால் ஸ்டாலின் தான் பிரதமர் ஆவார் என அறிவிக்க தமிழகத்திலும் சரி, தேசிய அளவிலும் சரி கூட்டணி கட்சிகளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை எனக்கூறப்படுகிறது. 

ஏனென்றால் வடமாநிலத்தவர்களின் எதிர்ப்பை திமுக ஏகபோகமாக சம்பாதித்துள்ளதாக கூறப்படும் இத்தருணத்தில், ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர் என அறிவித்தால் வடமாநிலத்தவர்களின் ஓட்டு மொத்தமாக கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இது திமுக தலைமைக்கு நன்றாக தெரியும் எனக்கூறப்படுகிறது. 

அப்படியானால் எதற்காக திமுக அமைச்சர் ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு பேசி வருகிறார் என விசாரித்தால், இது வெறும் தமிழர்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்வதற்கான திமுகவின் Strategy மட்டுமே எனக்கூறப்படுகிறது. அதாவது மு.க.ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர் என பிரச்சாரம் செய்தால் தமிழக மக்கள் அடடா அடுத்து ஒரு தமிழர் தான் பிரதமரா வரப்போறாரு என்ற ஆர்வத்தில் ஓட்டுக்களை திமுக கூட்டணிக்கு போட்டுவிடுவார்கள் என்பது தான் அந்த Strategy எனக்கூறப்படுகிறது. 

ஆனால் நன்கு உணர்ந்த அரசியல் விமர்சகர்களோ, திமுகவின் இந்த பிரச்சாரம் தேர்தல் சமயத்தில் ஃபேக் பயர் ஆகிவிடால் இருந்தால் நல்லது என்றும் எச்சரித்துள்ளனர்.