
'2024 தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் அவ்வளவுதான் என்ன நடக்குமோ' என திருமாவளவன் இப்பொழுதே பாஜக ஆட்சியை எண்ணி தூக்கமின்றி தவிக்கிறார்.
இன்னும் சரியாக 12 மாத காலத்தில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது, ஆளுங்கட்சியான பாஜக பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக எப்படியாவது பிரதமர் ஆக்கியே தீர வேண்டும் என முழு வீச்சுடன் வேலை செய்து வருகிறது. எதிர் கட்சிகளோ பிரதமர் வேட்பாளர் கூட யார் என்று தெரியாத அளவிற்கு தற்போது இருந்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி இணைந்தால் அந்த கூட்டணியில் மம்தா பானர்ஜி இணைய தயாராக இல்லை, மம்தா பானர்ஜி இணைந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் இணைய தயாராக இல்லை, இது எல்லாம் போதாது ஏன எதிர்க்கட்சி முகாமில் இருக்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னை ஒரு தேசிய அரசியல் பிம்பமாக நினைத்துக் கொள்கிறார்.
இப்படி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இல்லாத சமயத்தில் எப்படியும் 2024 தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக நம்மால் வேட்பாளரை கூட அறிவிக்க முடியாது. அப்படியே வேட்பாளர் யாரையாவது ஒருவரை அறிவித்தால் மற்றவர்கள் கூட அதற்கு இணக்கமாக இருப்பார்களா எனக்கு தெரியாது! எனவே 2024 பிரதமர் மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என இப்பொழுதே அரசியல் கட்சிகள் கணிக்க துவங்கிவிட்டனர். இதனால் பிரதமர் மோடி இருக்கக்கூடிய கூட்டணியில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என சில இடதுசாரிகள் கட்சிகள் கூட திட்டமிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக இருக்கும் கூட்டணியில் நான் இருக்க மாட்டேன் என இத்தனை நாள் வரை கூறி வந்த திருமாவளவன் தற்பொழுது 'அவ்வளவுதான் போச்சு! போச்சு! 2024 மோடிக்கு தான்' என்கின்ற ரீதியில் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்ன கூறினார் என்றால், 'பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆண்டில் தொடர்ச்சியாக என்ன நடந்தது என நாடு அறியும், ஒரு சராசரியான அரசியல் கட்சியாக பாஜகவை நாம் எடை போட்டு விடக்கூடாது, பாஜக பின்னால் ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் இருக்கிறது, அதனால்தான் அவர்களது முழக்கங்களில் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் திராவிட கட்சி இல்லாத தமிழகம் என்று சொல்கிறார்கள், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்து விட வேண்டும் என பாஜகவினர் நினைக்கிறார்கள். தப்பி தவறி 2024 ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நிகழும் அதை யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது! ஒரு நாள் இரவில் 500 ரூபாய் நோட்டும் 1000 ரூபாய் தாளும் செல்லாத நான் எப்படி அறிவித்தாரோ அதே மாதிரி ஒரு நாள் தொலைக்காட்சியில் தோன்றி இந்திய அரசியலமைப்புச் சட்டம் செல்லாது என சொல்வதற்கு ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என திருமாவளவன் பேசியுள்ளார்.
மேலும் சமீப காலமாக பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தற்போது தங்களது எதிர்ப்பு மனநிலையை இன்னும் குறைத்துக் கொண்டு வருவதை பார்க்க முடிகிறதும் குறிப்பிடத்தக்கது, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முன்பு எதிர்த்த அளவுக்கு தற்போது எதிர்க்கவில்லை, அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பாஜகவை எதிர்ப்பதற்கு சற்று தயங்குகிறது, மேலும் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் பாஜகவை எதிர்ப்பதை விட காங்கிரஸை எதிர்ப்பதை தங்களது பிரதான வேலை என நினைத்து வருகிறார்கள், தமிழகத்தில் பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த திமுக கூட தற்பொழுது பாஜக எதிர்ப்பை கையில் எடுப்பது கிடையாது! அதையும் தாண்டி பாஜகவை இங்கே எதிர்க்கிறேன் என கூறிவிட்டு டெல்லியில் பிரதமர் மோடியை சென்று நேரில் பார்த்து கைகுலுக்கி சிரித்து விட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படி திமுகவும் பாஜக இருப்பில் மழுங்கி போனதன் காரணமாக கண்டிப்பாக பாஜக தான் 2024 ஆட்சிக்கு வரும் என்பதை கணித்த திருமாவளவன் இனி வேறு ஒன்றும் செய்ய முடியாது என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன.