24 special

ஸ்டேட் போர்டுக்கு மட்டும் வாழ்த்து சொன்னீங்களே? சென்ட்ரல் போர்டுக்கு சொன்னீங்களா அண்ணாமலை?

Annamalai
Annamalai

பொதுவாக அரசியல் வாதிகளை மாணவ செல்வங்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வதில்லை.. ஆனாலும்  அண்ணாமலை என்ற முன்னாள் ஐபிஎஸ்  சிங்கம்.... பேசினாலே மாணவ செல்வங்களுக்கு ஒரே குஷி தான்.... தமிழகத்தில் எதிர்க்கட்சிகளுக்கும், பல மூத்த  அரசியல் தலைவர்களையும் கூட தன்னுடைய கேள்விகளால் செம்ம டென்சன் ஆக்கி விடுவார் அண்ணாமலை.


அதன் வெளிப்பாடே அண்ணாமலையை கத்துக்குட்டி, சின்ன பையன் என்றெல்லாம் பல மூத்த  தலைவர்கள் மிரட்டல் தோணியில்  பேசுவார்களே தவிர ..... அண்ணாமலை சொன்னது பொய் .... அப்படி எல்லாம் இல்லை... அவர் வைத்துள்ள குற்றசாட்டு பொய்,  அவரிடம் இருக்கும் ஆதாரம் பொய் என்றெல்லாம் எந்த அரசியல் தலைகளும் பேசுவது இல்லை. மாறாக  அவர் வாட்ச் பில் எங்கே ? இப்ப தான் அரசியலுக்கு வந்து இருக்கார்? கனவு காண்கிறார் என்று மட்டுமே   பேசுவதை பார்க்க முடியும். 

ஆனால், இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலை என்பவர் வழிகாட்டும குருவாகவே பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு காரணம்.. அவர் நன்கு பிடித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது மட்டுமல்ல....  அண்ணாமலையின் அறிவு கூர்மை.... பேச்சுத்திறமை... என்ன படித்தால்.. என்னவாகலாம்? படிப்பை எப்படி  எடுத்துக்கொள்ள வேண்டும்? சாதிப்பதற்கான வழிகள் என்ன என்பதனை தூள் பறக்க  பேசுவார் அண்ணாமலை..

அதன் காரணமாகவே சமீப காலமாக பல  துறை சார்ந்தவகர்கள் அண்ணாமலையை அழைத்து எங்கள் நிறுவனத்திற்கு வாருங்கள்... எங்கள் டீம் மெம்பரிடம் பேசுங்கள் என ....பள்ள மாணவர்கள் தொடங்கி மிக பெரிய ஆளுமையில் இருக்கும் நபர்கள் வரை அண்ணாமலையின் பேச்சு கேட்டு motivate ஆகுறாங்க... அதன் தாக்கம் இப்போது பள்ளி சிறுவனையும் விட்டுவைக்கவில்லை....

தற்போது பள்ளிகூட மாணவ செல்வங்களுக்கு தேர்வு  நடைபெறுவதால், மற்றவர்களை போலவே   அண்ணாமலையும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால் ஸ்டேட் போர்டுக்கு  மட்டும் வாழ்த்து தெரிவித்து சென்ட்ரல் போர்டுக்கு வாழ்த்து தெரிவிக்கம விட்டுடீங்களே அண்ணாமலை  என பாஜக தலைவருக்கு கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டு உள்ளான் ஒரு சிறுவன். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.