24 special

நோ காம்ப்ரமைஸ் இது உங்க மாமியார் வீடு இல்ல ஆக்ஷனில் இறங்கிய பாஜக அரசு சட்டவிரோத குடியேறிகளை விரட்ட 3D பிளான்

PMMODI,SUVENDU ADHIKARI
PMMODI,SUVENDU ADHIKARI

மேற்கு வங்கத்தின் அரசியல் களம் எப்போதும் ஒரு போர்க்களத்தைப் போலத்தான் தகித்துக் கொண்டிருக்கும், ஆனால் இப்போது அங்கு பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்து  ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ள பங்களாதேஷியர்களுக்கு எதிராகமுதல்வர் சுவேந்து அதிகாரி விடுத்துள்ள அதிரடியான எச்சரிக்கைதான் தற்போதைய ஒட்டுமொத்த விவாதங்களுக்கும் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. ஏன் இந்திய குடிமக்களின் வரிப்பணம்  சட்டவிரோத குடியேறிகளின் உணவு, உடை மற்றும் மருத்துவத்திற்காக வீணடிக்கப்பட வேண்டும் என்ற அவரது காரசாரமான கேள்வி, சாதாரண மக்களின் நெஞ்சில் பலத்த எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்றும் அவர்களின் மாமியார் வீடு அல்ல, உடனடியாக வெளியேறாவிட்டால் கடுமையான அரசு நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்ற அவரது மாஸான பேச்சு எல்லைகளைத் தாண்டி தேசிய அளவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக்கியிருப்பது அவர் அறிவித்துள்ள "கண்டறிதல் - நீக்குதல் - நாடு கடத்துதல்" (Detect – Delete – Deport) என்ற அதிரடியான மூன்று கட்ட ஆக்ஷன் பிளான் தான்.


இந்தத் திட்டத்தின்படி, முதற்கட்டமாக நாட்டின் எல்லைகளுக்குள் ஊடுருவி வாழும் சட்டவிரோத குடியேறிகள் மிகவும் துல்லியமாக அடையாளங் காணப்படுவார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி தங்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அதிரடி உத்தி அரசியல் ரீதியாக உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நோக்கத்திற்காக மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதிகளிலும், முக்கிய மாவட்டங்களிலும் "ஹோல்டிங் சென்டர்ஸ்" எனப்படும் பிரத்யேக தங்குமிட மையங்கள் மிக அதிவேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் தற்போதைய பரபரப்பான செய்தி. குறிப்பாக மால்டா மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய எல்லை மாவட்டங்களில் முதற்கட்ட தங்குமிட மையங்கள் ஏற்கனவே முழு வீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியேறிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்வூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடுபவர்களை வழக்கம்போல நீண்ட காலம் இந்தியச் சிறைகளில் அடைத்து வைத்து, அரசாங்கப் பணத்தைச் செலவழித்துப் பராமரிக்கும் பழைய நடைமுறைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பதிலாக, கைது செய்யப்படுபவர்களை நேரடியாக எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்து, மிக விரைவாக நாடு கடத்தும் புதிய நடைமுறையை முடுக்கிவிடுமாறு உயர் அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் உண்மையான இந்திய ஏழைகளுக்குச் சென்றடையாமல், இந்த ஊடுருவல்காரர்களால் சுரண்டப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமை ஏற்படுகிறது என்பதும் அவர்களின் பிரதான வாதமாக உள்ளது. "இந்தியர்களின் வரிப்பணம் இந்திய மக்களுக்கே" என்ற முழக்கம் தற்போது வெறும் அரசியல் வாசகமாக இல்லாமல், நாட்டின் இறையாண்மையைக் காக்கும் ஒரு பெரும் குரலாக உருவெடுத்துள்ளது.