24 special

விரைவில் நடிகர் விஜய் - அமித்ஷா சந்திப்பு! அரசியல் களம் மாறுகிறது...!

Actor vijay, amitshah
Actor vijay, amitshah

கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி. ஆர் சந்தித்தார் அது தெலுங்கு திரை உலகு மற்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசியலில் புயலை கிளப்பியது அதே போன்று தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை சந்திக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.


தெலங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்கோபால் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஐதராபாத்தில் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசினார்.

இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும் ஜூனியர் என்டிஆர் தெலங்கு சினிமாவின் ரத்தினம் என்றும் அமித்ஷா பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது .

இதன் பிறகே ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசிற்கு எதிராக அறிக்கை கொடுத்தார் ஜூனியர் NTR, பல்கலைக்கழத்தின் பெயரை மாற்றுவதன் மூலம் என்.டி.ராமாராவின் புகழை அழித்துவிட முடியாது'' ஜூனியர் என்டிஆர் ஜெகன் மோகன் முடிவிற்கு எதிராக அறிக்கை கொடுத்தார்.

இந்த சூழலில் ஜூனியர் NTR போன்று நடிகர் விஜய்யும் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமிட்ஷா சென்னை வருகின்ற போது அவரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது, இதற்கு விஜய்க்கு காரணம் இல்லாமல் இல்லை. உச்ச நட்சத்திரம் அந்தஸ்தை விஜய் அடைந்த போதிலும் அவரது திரைப்படங்கள் எப்போதும் சிக்கலை சந்தித்தே வந்து இருக்கிறது.

இந்த முறையும் விஜய் படங்கள் அதிக திரையறங்குகளில் வெளியாகுமா? என்பது கேள்வி குறியாக இருக்கிறது, சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்து இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பில் சினிமா வர்த்தகத்தை கையில் வைத்து இருந்தும் தனக்கு பின்னால் சினிமா துறைக்கு வந்தவர்களிடம் கைகட்டி நிற்கின்ற சூழ்நிலை இருக்கிறதே என விஜய் வேதனை அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆயிரம்தான் பாஜகவிற்கும் நமக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், கன்னடம் இந்தி போன்ற மொழிகளில் நமது படங்கள் வெளியான போதும் கூட பாஜகவினர் எதிர்ப்பை இப்படி உண்டாக்கியது இல்லை, பெங்களூரில் பாஜக அரசு தான் உள்ளது அவர்கள் நினைத்து இருந்தால் பெங்களூரில் நமது படம் வெளியாகமல் குடைச்சளை கொடுத்து இருந்து இருக்க முடியும் ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை..

ஏன் மோடியை சந்தித்த போது கூட நம்மிடம் மரியாதையாக தான் நடந்தார்கள், ஏன் பாஜகவை எதிர்க்கும் கருவியாக நாம் சித்தரிக்க படவேண்டும் என விஜய் தரப்பு நினைக்கிறதாம். விஜய் பாஜகவிற்கு எதிரானவர் என்ற தோற்றத்தை முறியடிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் சந்தித்து தன்னை பற்றி பரவும் அனைத்து வதந்திக்களுக்கும் முற்று புள்ளி வைக்க இருக்கிறாராம் விஜய் என்கின்றன கோடம்பாக்க வட்டாரங்கள்.

விஜய் மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா சந்திப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிகழும் போது அது தமிழக அரசியல் களத்திலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.