24 special

திமுகவில் வெடித்த அடுத்த சர்ச்சை..! பரபரப்பு கிளப்பிய ஆர் எஸ் பாரதி..! அரசியலில் திருப்புமுனை!

Stalin,  rs bharathi
Stalin, rs bharathi

திமுகவின் அமைப்பு செயலாளராக உள்ளவர் ஆர் எஸ் பாரதி.  ஏற்கனவே  சிறுபான்மை நீதிபதிகள் பலர் எங்களால் தான் நீதிபதிகளாக உள்ளனர் என்று கூறியதும், பத்திரிகையாளர்களை ரெட் லைட் மீடியா என விமர்சனம் செய்ததும் மேலும் தமிழக கவர்னர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலையை அவன், இவன் என்றும்,  ஐபிஎஸ் ஆபீஸர் எல்லாம் மெண்டல் தான் என்று பேசியது சமீபத்தில் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. 


தற்பொழுது ஆர் எஸ் பாரதி தன் சொந்தக் கட்சியையே விமர்சனம் செய்து சொந்தக் கட்சியிலேயே சலசலப்பை ஏற்படுத்தி பேசும் பொருளாகியுள்ளார்.

ஆர் எஸ் பாரதி போன்ற மூத்த தலைவர்களே இப்படி பேசுகிறார்கள் என்றால் அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் எனவும்.  மேலும் கண்ணாடி முன் நின்று மனசாட்சியுடன் பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு பொது மேடையில் உளறிவிட்டாரோ ஆர் எஸ் பாரத? அல்லது திமுகவில் தொண்டராக இருந்தால் காலம் காலத்திற்கு தொண்டனாகவே இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் .

என் ஆட்சியில் தமிழக மக்கள் எல்லோருமே சுகமாய் தான் இருக்கிறார்கள் என்ற பொய் பிம்பத்தோடு மேடைக்கு மேடை பேசி வரும் ஸ்டாலின், மற்றும் ஆஹா, எங்கப்பா இடத்துல அண்ணன பாக்கறேன்னு கனிமொழி பேசறதும், மூத்த திமுக அமைச்சர்கள் எல்லோரும் இளைஞர் அணி தலைவர் உதயநிதிக்கு துதி பாடுவதும்,  இன்னோரு பக்கம் அமைச்சர்கள் மத்தியில் குடுமி பிடி சண்டை நடந்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் ஆகி வரும் சூழ்நிலையில்,  

ஆர் எஸ் பாரதி  தன் சொந்தக் கட்சியில் உள்ள மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களையும்,   கூட்டணியில் கட்சி உள்ள வைகோவையும் சேர்த்து விமர்சித்துள்ளார். 

சென்னை ஆர்.ஏ. புரத்தில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்ற முன்னாள் எம்.பி. ஜின்னா படத்திறப்பு விழாவுல பேசும்போது, திமுகவின்  பல உண்மைகளை அப்பட்டமாக தன் பேச்சில் வெளிப்படுத்தினார். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் பதவி கிடைக்காது. இதையெல்லாம் நாம் ஜீரணித்துக்கொண்டு தான் இங்கு இருக்க வேண்டும். 

ஒரே கட்சி, ஒரே கொடின்னு இருந்த தனக்கு 63 வயசுல தான் எம்.பி பதவி கிடைத்தது என்று புலம்பி தள்ளிய ஆர் எஸ் பாரதி, மேலும் கட்சியில் பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்யும் அது நியாயம் தான் என்று கூறியுள்ளார். 

மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் இன்று  மந்திரியாகி விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ள ஆர் எஸ் பாரதி.  கட்சிக்கு உழைத்தவர்களுக்கெல்லாம் சீட் கிடைக்காமல், உழைக்காமல் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்றும், தங்களுக்கு பின்னால் வந்தவர்கள் மந்திரி, எம்.எல்.ஏயாகி விட்டதாகவும் மறைமுகமாக தற்பொழுது கட்சித் தலைமையை குத்திக்காட்டி பேசி இருப்பது திமுக உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அணி சார்பில் சார்பு அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு எதையோ குத்திக்காட்டுவது போல் இருப்பதாக திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே கூறுகின்றனர். 

சொந்த கட்சிகாரர்களின் வாரிசுகள் பதவியை பிடிக்க உழைக்கும் தொண்டர்கள் குமுறுவதாகவும் பேசியுள்ளார். தன் கட்சிக்குள்ளேயே உள்ள வாரிசு அரசியலை விமர்சித்தும், மேலும் திமுகவை முதுகில் குத்திய வைகோ விடம் திமுகவினர் கொஞ்சி குலாவுகிறார்கள் என்றும் காட்டமாக பேசிய இவர், கட்சி கொடியையும் சின்னத்தையும் காப்பாற்ற நான் மற்றும் ஜின்னா மிகவும் சிரமப்பட்டோம் என்றும் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.

ஒரு புறம் இவ்வளவு அப்பட்டமாக பாரதி தன் கட்சியையே விமர்சித்து பேசியது ஒரு புறம் இருக்க, இது போதாதென்று, திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தமிழ் நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என பப்ளிக்காக இப்போது உள்ள அரசை அப்பட்டமாக போட்டு தாக்கியுள்ளார். தமிழகத்தில் பெண்கள், குழந்தகளுக்கு எதிரான  குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்று வெளிப்படையாக கூறிய அவர்,தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்றும் பெரம்பலூர் மாணவி விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

பெரம்பலூர் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறை தான் காரணம் என்பது நிரூபிக்க பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவித்த அவர், வழக்கை அதே காவல் துறையிடம் அளிப்பது என்ன நியாயம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஒருபுறம் சொந்தக் கட்சிக்குள்ளையே கட்சிக்காரர்கள்  சண்டை போட்டுக்கொள்ளுவதும், மறுபுறம் கூட்டணி கட்சிகளே  போலீஸாரின் நடவடிக்கை சரி இல்லை என்பதும், 

அரசு மருத்துவமனைகளிள், மக்கள் பலரும் அவஸ்தை படும் மருத்துவமனையாக மாறி விட்டது ஒரு சுகாதாரத்துறை அமைச்சரே லிப்ட்டுக்குள் மாட்டிக்கொண்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாக்களில் வலம் வந்து, திமுகவின் விடியா ஆட்சி மக்களை பாடாய்படுத்தி வருகிறது  என்று பாஜக மற்றும் அதிமுக விமர்சனம் செய்து வந்தாலும்,  உட்கட்சி பூசல்கள், மூத்த தலைவர்களின் விமர்சனங்கள்,  மேலும் திமுக கூட்டணி கட்சியினராலேயே  ஏற்படும் தலைவலி, பொதுமக்கள் அதிருப்தி என எது நடந்தாலும் முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் இருப்பது. கொஞ்சம் கொஞ்சமாக திமுகவை சரிவை நோக்கி அழைத்து செல்கிறாரோ ? என்பதுதான் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் கேள்வி மற்றும் கருத்தாக இருக்கிறது.

Chitra Suresh