பாஜகவில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்கள் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கி வருகின்றன அதில் மிக பெரும் விவாத பொருளை உண்டாக்கி இருக்கும் சம்பவம்... பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி ஸ்ரீனிவாசன் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் வேலுமணி நடத்திய உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியது விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல மக்கள் பிரச்சனைகளுக்கு திமுக அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலனி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டது சோசியல் மீடியாக்களில் தற்பொழுது பேசும் பொருளாகியுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் பேசும்பொழுது, எஸ் பி வேலுமணி அழைப்பின் பேரில் கலந்து கொண்டதாகவும். தமிழகத்தில் உள்ள பாஜக கூட்டணிக்கு அதிமுக தலைமை என்று குறிப்பிட்டு பேசியதும், மேலும் தான் கோவை தெற்கு பகுதியில் ஜெயித்ததற்கு பாதிக்கு பாதி மேல் அதிமுக வின் உழைப்பு இருப்பதாகவும் பேசிய வானதி சீனிவாசன் மேலும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார்.
என்னதான் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினாலும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று அவர் கூறினாலும்,
பொதுமக்கள், அதிமுக ஓபிஎஸ் அணியினர் என பலரும், ஏன் பாஜகவின் கட்சித் தொண்டர்களுக்குள்ளேயே வானதி சீனிவாசன் கலந்து கொண்டது ஒரு வித முணுமுணுப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுகவில் தற்போது இபிஎஸ் ஓபிஎஸ் என இரு அணிகள் கட்சிக்குள் அடித்து கொண்டிருக்கும் நேரத்தில், யாருக்கு அதிமுக சொந்தம் என்பது குறித்து டிசம்பர் 6-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்க இருக்கிறது, இந்த நேரத்தில் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டது..எடப்பாடி அணியில் உள்ள ஜெயக்குமார் போன்றவர்கள் கூட்டணிக்கு தலைமை நாங்கள் தான், 2024 எலக்ஷனில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் என கூறிவரும் நிலையில், வானதி சீனிவாசனும் அதை ஆமோதிப்பது போல பேசியதும், கொங்கு மண்டலத்தில் அதிமுக தயவு இருந்தால் தான் இந்த முறையும் ஜெயிக்க முடியும் என்பது போல் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த முறை நான் வெற்றி பெற பாதிக்கு பாதி மேல் அதிமுகவின் பங்கு உள்ளது என்று குறிப்பிட்டு பேசியதும் விவாத பொருளாகி உள்ளது.இதே உண்ணாவிரத கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பு நடத்தி இருந்தால் வானதி கலந்து கொண்டிருப்பாரா?இன்னும் சிலர் பாஜக தலைமையிடம் வாதி சீனிவாசன் அனுமதி பெற்றுக் தான் கலந்து கொண்டாரா?
இல்லை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் அடுத்த தடவை மீண்டும் வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவினரின் தயவு வேண்டும் என்ற முறையில் கலந்து கொண்டாரா என்று சோசியல் மீடியாக்களில் பலவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டிசம்பர் 6 அன்று உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணையில் யார் பக்கம் தீர்ப்பு வரும் என்று தெரியாத சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அவர்தான் உண்மையான அதிமுக என்பது போல் பேசியதும் சர்ச்சையாகி உள்ளது.
பாஜக தேசிய தலைமையான பிரதமர் தொடங்கி உள்துறை அமைச்சர் அமிட்ஷா வரை தமிழகம் வந்த போது அதிமுக இரண்டு அணிகளையும் தனியே சந்திக்க வாய்ப்பே கொடுக்கவில்லை நேரடியாக ஒன்றாகத்தான் சந்தித்தார் பிரதமர்.
இப்படி இருக்கையில் வானதி ஸ்ரீனிவாசன் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரா என்ற கேள்வி எழுகிறது, அதே நேரத்தில் வானதி ஸ்ரீனிவாசன் மக்கள் பிரச்சனை என்பதால் மட்டுமே கலந்து கொண்டார், இதற்கு முன்னர் கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தபோது அந்த கூட்டத்திலும் வானதி கலந்துகொண்டார் அது போல் இதுவும் சாதாரண நிகழ்வுதான் இதை பெரிது படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்கின்றனர் வானதி ஆதரவாளர்கள்.