தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரண்டும் வேறு வேறு என பிரித்து பார்ப்பது எளிதல்ல, தமிழ் திரை உலகில் இருந்து வந்து அரசியலில் சாதனை செய்து முதல்வர் ஆனவர்களில் எம்.ஜி.ஆர் , கருணாநிதி, ஜெயலலிதா என பட்டியல் நீள்கிறது, விஜயகாந்த் சட்டசபை எதிர்கட்சி தலைவராக பதவி வகித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து ரஜினி அரசியல் குறித்து தனது திரைப்படங்களில் பேசிவந்ததுடன் சில ஆண்டுகள் முன்பு அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார், ஆனால் உடல்நிலையை காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என ஒதுங்கி கொண்டார், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தங்களது படங்களிலும், பட ப்ரோமோசனிலிலும் தொடர்ந்து அரசியல் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர், அதன் எதிரொலியாக ஆதரவு எதிர்ப்பு என இரண்டு பக்கங்களிலும் எழுந்தது, இந்நிலையில் நடிகர் விஜய் வாக்கு பதிவு (ஏப்ரல் 6) அன்று சைக்கிளில் வந்தது விவாதத்தை எழுப்பியது.
பின்னர் நடிகர் விஜய்யின் செய்தி தொடர்பாளர் விஜய் சைக்கிளில் வந்ததில் எந்த அரசியலும் இல்லை, வீட்டின் அருகே வாக்கு சாவடி இருந்த காரணத்தால் சைக்கிளில் வந்தார் எனவும் குறிப்பிட்டு பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார், இந்த நிலையில் விஜய் சேதுபதி வாக்களித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சாதி மதத்திற்கு எதிராக வாக்களித்ததாக தெரிவித்தார், இது மேலோட்டமாக முறையான கருத்தாக பார்க்கபட்டாலும் மறைமுகமாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது, இந்நிலையில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலுவின் நிலைதான் விஜய் சேதுபதிக்கு உண்டாகும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில் விஜய் சேதுபதி நடித்துவந்த இரண்டு திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் உண்டாகியுள்ளதாகவும், திரைப்படங்கள் குறிப்பிட்ட நாளில் வெளியாவது சந்தேகம் என்று கூறப்படுகிறது, விஜய் சேதுபதியை திமுகவும், உதயநிதியும் இயக்குவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் வரும் ஆண்டுகளில் விஜய் சேதுபதியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தொடர்ந்து அரசியல் காட்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் விஜய் சேதுபதியின் திரைப்படம் வெளியாகுமா அல்லது முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தை போன்று தள்ளிவைக்கப்படுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் இருக்கிறது என்கின்றனர் பல ஆண்டுகளாக சினிமாவையும் அரசியலையும் கவனித்து வருபவர்கள்.