Politics

பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதம்!! சொன்னது நடந்து விடுமோ புலம்பும் திமுகவினர்!!

பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதம்!! சொன்னது நடந்து விடுமோ புலம்பும் திமுகவினர்!!
பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதம்!! சொன்னது நடந்து விடுமோ புலம்பும் திமுகவினர்!!

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது, நக்சல் அச்சுறுத்தல் கொண்ட அசாம் மாநிலத்தை காட்டிலும் குறைவான வாக்குகளே தமிழகத்தில் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை கொடுக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.


மேலும் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அலையோ அல்லது எதிர்க்கட்சிக்கு சாதகமான எந்த அலையும் இந்த தேர்தலில் அடிக்கவில்லை என்றும் அவ்வாறு ஏதேனும் ஒன்று இருந்திருந்தால் வாக்கு சதவிகிதம் அதிகரித்து இருக்கும் நிலை உண்டாகியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் பதிவான முழுமையான வாக்கு விபரங்கள் வெளிவந்துள்ளது இதில் அதிகபட்சமாக அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 81.9% வாக்குகளும் குறைந்த பட்சமாக குஷ்பூ போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4% வாக்குகளும் பதிவாகி இருக்கின்றனர் 

பாஜகவின் 20 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விவரங்கள்: அரவகுறிச்சி - 81.9%, கோவை தெற்கு - 60.72%, குளச்சல் - 67.45%, தாராபுரம் - 74.14%, துரைமுகம் - 59.7%, காரைக்குடி - 66.22%, மதுரை வடக்கு - 63.58%,  மொடக்குறிச்சி - 75.26%, நாகர்கோவில் - 66.64%, இராமநாதபுரம் - 68.77%,  தளி - 76.49%, திருவையாறு - 78.13%, ஆயிரம் விளக்கு - 58.4%, திருக்கோவிலூர் - 76.24%, திருநெல்வேலி - 66.9%, திருவண்ணாமலை - 71.7%, திட்டக்குடி - 75.61%, உதகமண்டலம் - 67.06%, விளவங்கோடு - 66.9%, விருதுநகர் - 71.3%

தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் பாஜக போட்டியிட்ட பகுதிகளில் வாக்கு பதிவு அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் கிட்ட தட்ட 82% வாக்குகள் பதிவாகி இருப்பது திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, காலம் காலமாக அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகள் திமுகவிற்கு சாதகமாக இருந்த சூழலில் அதனை முறியடிக்கும் விதமாக மற்ற பகுதியில் உள்ள இந்துக்கள் வாக்குகள் அண்ணாமலைக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மக்கள் வாக்களித்து இருப்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை புலம்ப செய்துள்ளது, அதிலும் அரவக்குறிச்சியில் சொன்னதுபோல் வெற்றி பெற்று விடுவார்களோ என புலம்பி தவிக்கிறார்களாம்.