கட்டாய மதமாற்ற திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தரபிரதேச தேர்தல் வாக்குறுதிகளில் பாஜக தெரிவித்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
உத்திர பிரதேசத்தில் நாளை பத்தாம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், அப்போது கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் வாக்குறுதியில் 92% நிறைவேற்றப்பட்டிருக்கிறது என மேற்கோள் காட்டியிருந்தார். அதில் குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலை வைத்து பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. 18 வயதுக்கு குறைந்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்தது நிரூபணம் செய்யப்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், 5 ஆயிரம் கோடி செலவில் விவசாய நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும், ஏழை குடும்ப பெண்களுக்கு திருமணத்தின் போது ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும், தீபாவளி பண்டிகையின் போது இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும், ஆதரவற்ற பெண்கள் கணவனை இழந்த பெண்கள் இவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் மாத ஓய்வூதியமாக வழங்கப்படும், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும், யுபிஎஸ்சி பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இரட்டிப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு வேலை அல்லது சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் உடற்பயிற்சிக்கூடம் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தி தரப்படும்; 6 ஆயிரம் மருத்துவர்கள் 10 ஆயிரம் துணை மருத்துவ பணியாளர்கள் இதற்காக நியமனம் செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன அரசு மருத்துவமனை கட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. பாஜக வெளியிட்டுள்ள இந்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு யுபிஎஸ்சி பணிகளில் இரட்டிப்பு ஒதுக்கீடு அளிக்கப்படும் என குறிப்பிட்டது பெண்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. எனவே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது கிளம்பி இருக்கின்றது. மேலும் கருத்துக்கணிப்பில் பாஜக தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
More watch videos