கர்நாடக மாநிலத்தில் புர்கா விவகாரத்தை திட்டமிட்டு திரித்து பரப்பி வருவதாக பாஜக செய்தி தொடர்பாளர் SG சூர்யா கடுமையாக சாடியுள்ளார், இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
இந்தியாவில் எந்தவொரு பிரச்சனை நடந்தாலும் அதில் எது சரி எது தவறு என்பதை விடுத்து, பா.ஜ.க எதிர் நிலைபாடு எடுத்து அதை மக்களிடம் நிறுவ பாடுபடுவது தி.மு.க, அதன் சார்பு ஊடகங்களின் உத்தி. 2017 ஜல்லிக்கட்டில் தொடங்கப்பட்ட இந்த யுத்தி தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. தற்போது பர்தா. ஏதோ இத்தனை நாட்கள் மாணவியர் பர்தா அணிந்தது போலவும், திடீரென பர்தா அணியக்கூடாது என சொல்லப்பட்டதாக கட்டமைக்கின்றனர். திடீரென 6 மாணவிகள் பள்ளியில் பர்தா அணிவோம் என புது பிரச்சனை கிளப்புகின்றனர்.
இத்தனை நாள் இல்லாமால் இப்போது என்ன புதிதாக என கல்லூர் நிர்வாகம் அனுமதி மறுக்கின்றது. அம்மாநில அரசு இத்தனை நாட்களாக இப்படி ஒரு கோரிக்கையே இல்லை, திடீரென கிளப்பட்டுள்ளது என தெளிவு படுத்தியது முதல் பல்வேறு ஊடகங்களும் கடந்த கால புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன. 2008 முதல் 2021 வரை 13 ஆண்டுகள் யாரும் பர்தா அணியாத நிலையில் திடீரென இப்போது இதை கிளப்பியது யார்? ஏன்?
இத்தனைக்கும் இங்கு நாம் கல்லூரிகள் என குறிப்பிடுவது இளங்கலை கல்லூரிகள் அல்ல. கர்நாடகாவில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வி நிலையங்களை தான் Pre University College (PUC) என்று அழைக்கின்றனர். இளங்கலை கல்லூரி/பல்கலைக்கழங்களில் இந்த பிரச்சனையே இல்லை, ஏனெனில் கல்லூரிகளுக்கு சீருடை இல்லை. பர்தா அணிவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் பள்ளிகளுக்கு சீருடை உள்ளது தானே? சீருடையை மீறி பர்தா அணிவேன் என்று வீம்பு பிடிப்பதை எதிர்க்கிறார்கள்.
ஆண்டாண்டுக்காலமாக அணிந்தவர்களும் இல்லை. இப்போது திடீரென இப்பழக்கத்தை ஆரம்பிப்பதால் தான் இப்பிரச்சனையே. இத்தனைக்கும் பள்ளி வளாகத்தில் பர்தா அணிவதில் தடை இல்லை, வகுப்பறையில் மட்டும் அணிய வேண்டாம் என்று தான் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. அதை எப்படியெல்லாம் திரித்துள்ளனர் என நீங்களே பாருங்கள். 6 மாணவிகள் கிளப்பிய இப்பிரச்சனை ஒட்டுமொத்த மாநிலத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. கொடுமை.
அப்பகுதி இஸ்லாமிய சமூகத்திலேயே சிலர் எதற்கு இந்த தேவை இல்லாத பிரச்சனை. இது இஸ்லாமிய பெண்களுக்கு நன்மை பயக்காது என எதிர்த்து குரல் கொடுக்கின்றனர். அதை தமிழ் ஊடகங்கள் யாரும் காட்ட மாட்டார்கள். அப்பகுதி இஸ்லாமிய தலைவர் ரஹீம் இதை எதிர்த்து அப்பெண்களுக்கு புத்திமதி சொல்லியுள்ளார். தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டாம் என நியாயமாக பேசியதற்காகவே தற்போது ரஹீமுக்கு அடிப்படைவாதிகளால் கொலை மிரட்டல்கள். போலீசில் புகார் அளித்துள்ளார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்களோ/அறச்சீற்றத்தை குத்தகைக்கு எடுத்தவர்களோ சொன்னார்களா? சொல்ல மாட்டார்கள். இப்போது சொல்லுங்கள் இப்பிரச்சனையை கிளப்பியது யார்?
குஜராத்தில் ரயில் பெட்டியை கொளுத்தி அப்பாவி பெண்களை, குழந்தைகளை துடிதுடிக்க உயிரோடு எரித்து கொன்றது தவறே இல்லை, ஆனால் எதிர்வினையாற்றியது மட்டும் தவறு என்பர். அதேபோல தான் இதுவும். இவர்களின் மதவாதத்துக்கு பலியாகாதீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More watch videos