கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அனைவருக்கும் சீருடை எனும்போது சில இஸ்லாமிய பெண்கள் மட்டும் நாங்கள் புர்கா மட்டுமே அணிவோம் என தெரிவித்த காரணத்தால் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
இஸ்லாமிய மாணவிகளுக்கு படிப்பை தாண்டி மதம் முக்கியம் என்றால் எங்களுக்கு எங்கள் மதம் முக்கியம்தான் என இந்து மாணவிகள் காவி நிறத்தில் ஷால் அணிய தொடங்கினர் மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தை தாண்டி தேசிய அளவில் இந்த விவகாரம் கவனத்தை பெற்றது.
இந்த சூழலில் ஹிஜாப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நபர்களை நோக்கி பத்திரிகையாளர் உதயகுமார் செந்திவேல் கேள்விகளை எழுப்பியுள்ளார் அது பின்வருமாறு :-
பதில் இருக்கிறதா நடுநிலைகளே?
1)ஹிஜாப் விவகாரத்தில் குரல் கொடுக்கும் நடுநிலைவாதிகள் லாவண்யா விவகாரத்தில் அமைதியாக இருந்தது ஏன்?
2)கல்லூரிக்கு சீருடையில் அனைவரும் வரும் போது 6 பேர் மட்டும் முரண்டு பிடித்தது ஏன்?
3)கர்நாடகத்தில் மதசார்பின்மை பேசும் முற்போக்கு வாதிகள்... பெரியாரிஸ்ட் கொளத்தூர் மணி அலுவலகம் முன்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிகேட்டு போராடிய ப்ரான்ஸ் தமிழச்சி மிரட்டி வெளியேற்றியதை கண்டிக்காதது ஏன்?
4)கடந்த சுதந்திர தினவிழா போது தேசிய கொடியை இறக்கிவிட்டு பஞ்சாப் போராட்டகாரர்கள் அவர்கள் கொடியை ஏற்றியதை கண்டிக்காத நபர்கள் கல்லூரியில் காவி கொடி ஏற்றியதை பேசுவது ஏன்?
5) தாலி அடிமைத்தனம் என பேசும் நபர்கள் புர்கா மதஉரிமை என குரல் கொடுப்பது ஏன்?
6) கர்நாடகாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் போராடுவது தவறு என்றால் 1960-களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களை பயன்படுத்தியது ஏன்?
7) காஞ்சிபுரத்தில் ருட்ராட்சம் அணிந்து சென்ற மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்ட போது உங்கள் வாய்கள் பூட்டி கிடந்தது ஏன்? பதில் சொல்லுங்கள் நடுநிலைவாதிகளே? என கேள்வி எழுப்பியுள்ளார் உதயகுமார் செந்திவேல் இந்த சூழலில் தற்போது உதயகுமார் செந்திவேல் எழுப்பிய கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.