தமிழகத்தில் அரியலூர் சிறுமி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அண்ணாமலை தலைமையில் இன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்து உள்ளது பாஜக.
அதே வேளையில் மதமாற்றம் தடைச்சட்டம் கொன்டுவர வேண்டும், லாவண்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், பள்ளி நிர்வாகத்திற்கும், கொடுமை செய்த ஆசிரியருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் முன்னிறுத்தி ஏற்கனவே பாஜக போராடி வரும் நிலையில், அரசு தரப்பில் இருந்து லாவண்யா இறப்புக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்றவாறே தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
லாவண்யாவின் மரணம் தொடர்பான வீடியோ ஆதாரம் மட்டுமே மிக முக்கியமாக இருக்கும் போது, அந்த வீடியோவை தந்தவர் யார், அவருடைய செல்போனை சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோணங்களில் வீடியோ எடுத்தவருக்கு டார்ச்சர் அதிகரிக்கவே, உயர்நீதிமன்ற மதுரை கிளை, வீடியோ எடுத்தவரை துன்புறுத்துவதை விட்டுவிட்டு உண்மையான காரணத்தை கண்டுப்பிடிப்பதில் ஆர்வம் காட்டுங்கள் என தெரிவித்து உள்ளது. இப்படியான நிலையில் தான் சமூக வலைத்தளத்தில், மத மாற்றம் குறித்த பல்வேறு வீடியோக்கள் படு வேகமாக பரவி வருகிறது.
1. அதில் ஒன்று பள்ளி மாணவிகளிடம் ...பொட்டுவைக்காதே, பூ வைக்காதே, வளையல் போடாதே என மன மாற்றமும், மதமாற்றம் செய்வது.... ஆனால், விழித்து கொண்ட மாணவிகள் டார் டாராக கேள்வி கேட்டு உள்ளனர்.
2. அடுத்ததாக ஒரு பாக்கெட் சோறு கொடுப்பதிலும் மதத்தை திணிப்பது.... பசியோடு இருப்பவரை பார்த்த உடன் சாப்பாடு தருகிறார் என்பது தான் இங்கு முக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்.. கேமரா ஆன் செய்து, பிறகு அவருக்கு உணவு கொடுத்து ஏசு நேசிக்கிறார்.... என சொல்லி அவரிடம் உணவு கொடுக்கிறார்.. பாவம் அந்த மனிதரும் என்ன சொல்வது என்று தெரியாமல் தலை ஆட்டிக்கொள்கிறார்.... இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் எத்தனை பேருக்கு இந்த வீடியோ மூலம் அவர் மதமாற்றம் டார்கெட் ரீச் ஆகிறது என்பது தான் அவருடைய டார்கெட். அந்த அளவுக்கு அவருக்கு அவர் சார்ந்த திருச்சபையில் இருந்து வருமானம் இருந்திருக்கலாம்.
3. அடுத்ததாக இந்துக்களின் வீடு வீடாக போயி மதமாற்றம் செய்ய மூளை சலவை செய்வது.... இதை கண்டித்து எவ்வளவு கேவலமாக திட்டினாலும் கொஞ்சம் கூட அசிங்கப்படாம மீண்டும் மூளை சலவை செய்ய முயற்சி செய்வது ... இதோ இந்த வீடியோவை பாருங்க....
இது போன்ற நிகழ்வுகளால் இந்து கலாச்சாரமும், இந்து மதமும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதனை தற்போது மக்கள் உணர தொடங்கி இருக்கின்றனர். அதே வேளையில் மதம் மாறினால் நல்லா
துட்டு கிடைக்குமா...ஸ்காலர்ஷிப் கிடைக்குமா என்ற பாணியில் சிந்தித்து மத மாற்றம் செய்வதும், அதே வேளையில் குல தெய்வம் கோவிலுக்கு சென்று இப்படி ஒரு உருட்டு....ஏசப்பா நேசிக்கிறார் என்று சர்ச்சில் உட்கார்ந்து அங்கு ஒரு உருட்டு....செய்கின்றனர்.
உதாரணத்திற்கு மதமாற்றம் செய்துக்கொண்ட ஒருவர் இந்து மத மக்களை சந்திக்கும் போது, இயற் பெயர் சேகர் என்றால்... அதனையே சேகர் என்று சொல்வார். சர்ச் பக்கம் செல்லும் போது அந்தோணி சேகர் என்பார். இப்படி தாங்க இருக்கு தமிழகத்தின் நிலைப்பாடு. இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே...கருத்துக்களை பதிவிடுங்கள்.