இளம் பத்திரிகையாளர் அருண் ரமேஷ் உத்திர பிரதேச அரசியல் நிலவரம் குறித்து முழுமையான தகவலை சுருக்கமாக தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :உபி தேர்தலில் 300+ தொகுதிகளை பெறுவோம் என்று அமித்ஷா எவ்வாறு கூறுகிறார் ? ஆணவமா ? பிம்பத்தை கட்டமைக்கவா ?... தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று அகிலேஷ் யாதவ் அறிவித்திருப்பதே அதற்கு பதில்.
அவரது சமாஜ்வாதி பின்னால் யாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தவிர வேறு யாரும் பெரிதாக அணிதிரளவில்லை. லகிம்புர் கெரி வன்முறை, உள்துறை இணையமைச்சரின் மகன் குறிவைக்கப்பட்டது, பிரியங்கா காந்தியின் Photo Op போன்றவை பாஜக மீது கோபத்தில் இருந்த உபி பிராமணர்களை பாஜக பக்கமே தள்ளியுள்ளது. அதனால் தான் அவ்விவகாரத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் கப் சிப். மாயாவதி பரசுராமருக்கு பால்குடம் எடுக்காதது தான் பாக்கி. உபி பிராமணர்களை வலைக்க அனைத்து strategyயும் கையாள்கிறார். இது 2006-07 காலத்தில் இருந்து மாயாவதி கையாளும் யுக்தி.
பாஜகவும் பிராமண ஓட்டுகளை விடக்கூடாது என்பதில் தெளிவாகவுள்ளது. அதனால் தான் காங்கிரஸில் இருந்து வந்த ஜிடின் பிரஸாதாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது. அதனால் பிராமணர்கள் ஓட்டு இரண்டாக பிளக்கும் என்று அர்த்தமில்லை. காரணம் பின்னால்.. இதை தாண்டி ஓம் பிரகாஷ் ராஜ்பர். அவரது பல ஜாதி கட்சிகள் அடங்கிய வானவில் கூட்டணி. அது பாஜக ஓட்டு வங்கியையே பாதிக்கும். ஆனால் எவ்வளவு என்பது தெரியவில்லை. அகிலேஷின் சித்தப்பா அதாவது முலாயம் சிங்கின் தம்பி & அரசியல் வியூக செயல்பாட்டாளர் சிவ்பால் யாதவ். அவரை தன்பக்கம் இழுக்க அகிலேஷ் முயல்கிறார்.
ஆனால் அவரது பின்னால் பெரிய கூட்டமெல்லாம் இல்லை. அவர் வந்தால், சமாஜ்வாதி கூட்டணிக்கு பலம் சேர்ந்ததாக ஒரு பிம்பம். அவ்வளவு தான். இதில் மிக முக்கியமான ஒரு கட்சி. ராஷ்ட்ரிய லோக் தல். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்-கின் பேரன் ஜெயந்த் சவுதிரி தலைவராக இருக்கும் கட்சி. இவருக்கு பெரிய ஆதரவெல்லாம் இல்லை. ஆனால், traditionalலாக இவரது கட்சி மற்றும் குடும்பத்துக்கு இருக்கும் "விவசாயிகளுக்கானவர்கள்" என்ற பிம்பம். அது இந்த பஞ்சாப் ஹரியானா விவசாய போராட்டத்தால் மேற்கு உபியில் குறிப்பாக ஜாட்கள் இருக்கும் பகுதிகளில் ஓட்டாக மாறுமா ? என்பது தான் கேள்வி. இதில் ஒரு டுவிஸ்ட் உள்ளது. அவர் தற்போது வரை அகிலேஷ் யாதவ்வுடன் கூட்டணியில் உள்ளார்.
காங்கிரஸ், பிரியங்கா அடம்பிடிப்பதாலும் அகிலேஷ் சேர்த்துக்கொள்ளாததாலும் தனியாக நிற்கிறது. இதில் திருப்பதாக ஜெயந்த் சவுதிரியை பிரியங்கா காந்தி பார்த்து பேசியது. அதுவும் அரசியல் சந்திப்பாம். இது கூட்டணியானால் பாஜகவுக்கு குஷி தான். காரணம் அகிலேஷ் மட்டுமே பாஜக இருக்கும் உயரத்தை எட்டிப்பார்க்க நினைக்கும் இடத்தில் உள்ளார். அதற்கு பின்னால் எங்கேயோ காங்கிரஸ் உள்ளது. ஜெயந்த் சவுதிரி மட்டும் அங்கே சென்றால் பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும். அகிலேஷுடன் நின்றால் பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் ஓரளவுக்கு திரளும்.
அப்புறம் நம்ம பாஜகவின் A/B/C/D டீம் ஓவைஸி. அவர் பாஜக/மோடி/யோகி எதிர்ப்பை தீவிரமாக செய்கிறார். இதில் காமெடி என்னவென்றால் அதற்கு இணையாக காங்கிரஸ், சமாஜ்வாதி, மாயாவதியை தாக்குகிறார். இவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் உடன் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும், அவரது கீழ் இருக்கும் சிறு எண்ணிக்கை ஜாதி ஓட்டுகள் இங்கு வராது. இவரது இஸ்லாமிய ஓட்டுகள் அங்கே போகாது. பாமக-அதிமுக chemistryய விட மோசம். So, இதுவும் ஓட்டுபிளவே. இதற்கு பின் பாஜகவின் கூட்டணி கட்சிகளான அப்னா தள் மற்றும் நிஷாத். அப்னா தள்ளால் சிறந்த ஓட்டு transfer-ரை செய்யமுடியும்.
காரணம் அனுப்பிரியா பட்டேல் மோடியை அப்பா போன்று பார்த்து, அரசர் போல் புகழ்வது. அதற்கு இருக்கும் 3 சதவீத பரவலான வாக்குகள் பாஜகவுக்கு அவசியமானதே. அடுத்தது நிஷாத் கட்சி. அதற்கு, கங்கையில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோரிடம் ஆதரவு உள்ளது. அந்த கட்சிக்கு அப்னா தள் போன்று நமக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உள்ளது. ஆனால் அதை அமித்ஷா "ஏதோ" செய்து சரிசெய்து விட்டார். ஆனாலும், யாதவ்+முஸ்லிம்+கோபத்தில் இருக்கும் ஒருபகுதி பிராமணர்கள், சிறு எண்ணிக்கை ஜாதியினரை தாண்டி எவ்வாறு பாஜக 300+ பெற முடியும் ?
பின்னால் சொல்வதாக சொன்னதே இதுதான். பாஜக மீது எத்தனை கோபம் இருந்தாலும் மோடி என்ற Factor களத்தில் வரும்போது அந்த கோபம் தணிகிறது. Literally அவர் ஒரு ஹிந்து ஹிரதய சாம்ராத்தாக நிற்கிறார். அவரது செல்வாக்கு மட்டுமே பாஜகவுக்கு 10% வாக்குகளை கூடுதலாக கொடுக்கும். அதனுடன் யோகிக்கு இருக்கும் நற்பெயர். அவரது அரசின் ரவுடிஸத்துக்கு எதிரான No Compromise அதிரடி.
பின் மக்களை நேரடியாக சென்றடைந்த பாஜக அரசுகளின் Welfare Schemes, வெற்றிகரமான தடுப்பூசி திட்டம், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள், கிட்டத்தட்ட 16 மாத இலவச ரேஷன், போன்றவை ஓட்டாகும். கடைசியாக பாஜகவின் No nonsense policy, Booth Management, மற்றும் மற்ற Election Machinary. ஆனால் என்ன நடக்கும் ? யார் எண்ணுவதெல்லாம் நடக்கும். நடந்தால் தான் தெரியும் என குறிப்பிட்டுள்ளார் .
மினி நாடாளுமன்ற தேர்தல் எனவும் உத்திர பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுபவர்களே மத்தியிலும் ஆட்சியை பிடிப்பார்கல் என கூறப்படும் சூழலில் உத்திர பிரதேச அரசியல் சூழலை நாடே உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது .