24 special

இருக்குற ஆள் எல்லாம் பத்தாது..! முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் எடுத்த அந்த முடிவு...!

mktalin , udhayanithi
mktalin , udhayanithi

கடந்த வாரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றும்போது பல கருத்துக்களை தெரிவித்தார் மேடை பேச்சில், முக்கியமான விஷயம் ஒன்று உங்களிடம் தெரிவிக்க நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று அனைவருடைய கையிலும் மொபைல் போன் உள்ளது அந்த மொபைல் போனில் முக்கியமான ஆப் ஒன்று இருக்கிறது, அதுதான் வாட்சப் முக்காவாசி நேரம் அனைவரும் அதில் தான் இருக்கிறீர்கள்! 


நமக்கு எதிர் திசையில் இருக்கக்கூடிய ஆட்கள் குறிப்பாக ஆளுநரில் ஆரம்பித்து அடிமை சங்கிகள் வரை நமக்கு எதிரான பொய் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை அனைத்தும் பொய் என்பதை மக்களிடம் ஆதாரத்துடன் விளக்க வேண்டும்! கழகத்திற்கு எதிரான சூழ்ச்சிகளையும் நீங்கள் முறியடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் ஒன்றிய அரசு செய்ய நினைக்கும் அனைத்தையும் ஆளுநர் தன் கருத்தாக பேசிக் கொண்டிருக்கிறார். மாநிலத்தின் பெயரையே தற்போது மாற்றம் முயற்சித்தி வருகின்றனர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் விடியல்களை தரப்போகிறார் நம் தலைவர்! 18 வயது பூர்த்தியானவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயரிடம்பெற உதவி புரியுங்கள் சட்டத்துறை நண்பர்களுடன் இணைப்பில் இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள் என்று பல நடவடிக்கைகளையும் பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் பேசினார்.

இதன் பின்னணியை விசாரித்த போது இணையத்தில் பிரச்சாரம் செய்ய திமுகவிற்கு அதிக அளவில் ஆட்கள் தேவை என்பதைதான் உதயநிதி குறிப்பிடுகிறார் என தகவல்கள் கிடைத்தன.இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து தொகுதியின் பூத் ஏஜெண்டுகளும் இணையதளத்தில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது முதல்வர் மு க ஸ்டாலின் அவரது கட்சியினர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு கட்சியின் வெற்றி என்பது வாக்குச்சாவடியில் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பங்களிப்பையே அடிப்படையாக கொண்டுள்ளது. தெருத்தெருக்களாக சென்று ஒவ்வொரு திண்ணைகளிலும் அமர்ந்து பிரச்சாரங்களை செய்தோம் ஆனால் இனிவரும் எதிர்காலம் என்பது டிஜிட்டல் யுகம். சமூக வலைதள ஊடகங்களும் பெருகிவிட்ட காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் இதனால் இக்காலகட்டத்தில் அவப்பெயர்கள் ஏற்படுவது எளிதாகி விட்டது எனவே அத்தகைய சதி செயல்களில் மாட்டி கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாற வேண்டும் ஏனென்றால் நீங்கள் தான் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடுவீர்கள். 

அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக இருக்கப் போகிறவர்களை நீங்கள் தான்! என்று தனது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அடுக்கடுக்கான ஆலோசனைகளை பட்டியலிட்டு இருந்தார் முதல்வர் மு க ஸ்டாலின். இதன் பின்னணியில் என்ன என்று விசாரித்த பொழுது, பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. பாஜக அசுரத்தனமாக வளர்ந்து விட்டது பாஜக தொடுக்கும் விமர்சன கணைகள், எதிர் வைக்கும் கருத்துக்கள் மற்றும் அரசியல் அரங்குகளில் முன்வைக்கும் கேள்விகளை சமாளிக்க முடியாமல் இணைய உடன்பிறப்புகளும், களத்தில் இருக்கும் உடன் பிறப்புகளும் தடுமாறுகிறார்கள். எனவே இதனை சமாளிப்பதற்கு நமக்கு இருக்கும் ஒரே வழி இணையதளம் தான். இதை விட்டால் வேறு வழி இல்லை ஆனால் தற்போது அதில் நாம் வீக்காக உள்ளதால் அதற்காக ஆட்களை சேர்த்தாக வேண்டும், அதுவும் தேர்தலுக்குள் ஆட்களை சேர்த்து தேர்தலை நாம் சந்திக்க வேண்டும் எனவும் திமுக தலைமை முடிவெடுத்து இப்படி பேசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதுமட்டுமல்லாமல் தற்போதைய திமுக சமூக வலைதள அணி வேறு வீக்காக இருப்பதாகவும் அறிவாலய தலைமை நினைப்பதாகவும், அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் சமாளிக்க முடியவில்லையே இதில் நடைப்பயணம் வேறு துவங்கப்பட்டால் திமுக விற்கு மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என கருதி இப்படி இணையதள தொண்டர்கள் சக்தியை திமுக வலுப்படுத்தபார்க்கிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.