
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினரும் ஆளும் கட்சியினரும் போட்டி போட்டு தீவிர பணிகளில் இறங்கி உள்ளனர்.மேலும் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பாட்னா மற்றும் பெங்களூரு என பல கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த பல திட்டங்கள் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் திமுக பல முக்கிய அமைச்சர்கள் மூலம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தை ஜூலை 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் அதிமுக தரப்பில் இருந்து திமுகவிற்கு எதிராக போராட்டங்கள் மற்றும் காய்கறி விலை உயர்வு ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறையினரின் ரெய்டு மற்றும் வாக்குறுதி எங்கே என அரசு ஊழியர்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அரசை நோக்கி கேள்வி எழுப்புவதால் தற்போது திமுக அரசு தள்ளாடி வருவதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர்களின் ஒரு சில நடவடிக்கைகள் திமுகவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதாகவே தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏழு மாவட்ட செயலாளர்களை இடமாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில் திமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று திமுக தலைமை கருதியதால் திருவள்ளூர் சென்னை கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட ஏழு மாவட்ட செயலாளர்களை மாற்ற முடிவு செய்துள்ளது.. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் அதிக ஓட்டு வாங்குவதற்குமாவட்ட செயலாளர்களின் பங்கு மிக முக்கியம் மேலும் மாவட்ட செயலாளர் தனது பணியை சரிவர செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் இந்த மாற்றம் செய்ய ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏழு மாவட்ட செயலாளர்களை இடமாற்றம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் திமுகவின் அமைச்சரவை கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயல்பாடுகள் குறித்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருப்பம் என்றும் இன்று வேலை வாய்ப்பை பெறும் நீங்கள் நாளை 100 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கூறிவிட்டு இறுதியாக அமைச்சரவை கூட்டத்தில் ஒழுங்காக இருங்கள் இல்லை என்றால் துறையை மாற்றி விடுவேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது அமைச்சர்கள் இடையே பரபரப்பபை ஏற்படுத்தியது.
இவ்வாறு முதல்வர் எச்சரித்த காரணத்தினால் திமுக அமைச்சர்கள் சற்று பொதுவெளியில் விமர்சனங்கள் எழும் அளவிற்கு எதுவும் பேசிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது அதுவும் தேர்தல் வரை வாயை மூடிக்கொண்டு இருப்பதே சிறந்தது என முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லாமல் எந்த நேரத்திலும் அமைச்சரவை மீண்டும் மாற்றப்படலாம் என்றும் தெரிகிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.