24 special

அடுத்து யாருய்யா பட்டியல்ல...!பீதியில் அறிவாலய மூத்த தலைகள், வெளியான ரகசியம்....!

Anitha radhakrishnan,mkstalin
Anitha radhakrishnan,mkstalin

தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை கடந்த இரண்டு மாதங்களாக  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த அதிரடி ரெய்டில் கட்சியின்  முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் சிக்கி இருந்தனர். இதில் திமுக கட்சியின் முக்கிய அமைச்சரான செந்தில்பாலாஜி, பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் அமலாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியது.. சோதனையின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகள் கைப்பற்றப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை நடவைக்கையால் தற்போது புழல் சிறையில் மருத்துவமனையில்  கண்காணிக்கப்பட்டு வருகிறார்.


ஒருபுறம் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை வெற்றிகரமாக புழல் சிறைக்கு அனுப்பிய நிலையில் அடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளிடம்  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வசமாக சிக்கினார். அமலாக்கத் துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைச்சர் பொன்முடி தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியது. செம்மண் குவாரியில் மோசடி செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக கருதி அமைச்சர் பொன்முடி மட்டுமல்லாமல் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய வீடு பொறியியல் கல்லூரி அறக்கட்டளை மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தத நிலையில் பல அதிர வைக்கும் உண்மைகளும் ஆவணங்களும் வெளிவந்தன. செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு சென்ற நிலையில் அமைச்சர் பொன்முடியும் சிறைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்து உள்ளது.

அடுத்த கட்டமாக அமலாக்க துறையினர் ரெய்டு பட்டியலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அனிதா ராமகிருஷ்ணன் பெயர் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிமுக ஆட்சியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது  இவரும் பட்டியலில் உள்ளார் என தெரிகிறது. 

இதுமட்டுமல்லாமல் அடுத்த கட்டமாக அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் பதியப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அடுத்து எந்த அமைச்சர் மீது அமலாக்கத் துறையினர் ரெய்டு இருக்குமோ என்று திமுக பயத்தில் இறந்துவரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் பேசும்போது அடுத்த அமலாக்கத் துறையினர் மீது யார் வீட்டுக்கு வந்தாலும் கவலை இல்லை என்று கூறியது வேறு பல விமர்சனங்களை எழுப்பியது. 

மேலும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூட்டத்தில் பேசிய போது அமலாக்க துறையின் அடுத்த ரெய்டு உதயநிதி வீட்டில் தான் இருக்கும் எனக் கூறியது வேறு குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுக அமலாக்கத் கத்துறையின் அடுத்த ரைட் யார் மீது இருக்கும் என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுகவின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. என்ன அமைச்சரவை கூட்டத்தில் திமுகவின் திட்டங்கள் மட்டும் செயல்பாடுகள் பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அமலாக்கத்துறையினரின் ரெய்டு பத்தி எதுவும் விவாதிக்கப்படவில்லை எனவும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த தலைவர்கள் எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தனர் யாரும் ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ரெய்டு பீதி அனைத்து திமுக அமைச்சர்களுக்கும் இருக்கிறது என பல்வேறு தரப்பில் இருந்து கூறுகின்றனர்.