பாரத ரத்னா ஏபி வாஜ்பாய் அவர்களின் 97 வது பிறந்தநாள் நல்லாட்சி தினவிழா தமிழக பாஜக சார்பில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசிய அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். இந்நிகழ்வில், பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக 5 முக்கிய நபர்களை பற்றி குறும்படம் வெளியிட்டு அவர்களின் செயல்பாட்டை பெருமை படுத்தி உள்ளது பாஜக.
அப்போது அண்ணாமலை பேசும் போது.... "5 மிக பெரிய மனிதர்களை தேர்ந்தெடுத்து இந்த மேடையில் பாஜக பெருமை கொள்கிறது. டாக்டர் ஜெயச்சந்திரன்- ஐந்து ரூபாய் டாக்டர். இவரை பற்றி தெரியாதவர் யாரும் இல்லை. "மான் கி பாத்" நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்களும் புகழ்ந்து பேசி இருப்பார்.
அதேபோல் கம்பம்பட்டியை சேர்ந்த டாக்டர் துரைசாமி, 156 ஏக்கர் எடுத்து முழுவதும் பசுமை செய்து, பூமி தாயை பாதுகாக்கிறார். இது போதாதென்று, 500 ஏக்கர் வரை இதே போல் பசுமை செய்தால் தான் என்னை இறைவன் அழைத்துக் கொள்வார் என தெரிவித்து இருக்கின்றார். அந்த அளவுக்கு இறைவனுக்கும் அவருக்கும் ஓர் உணர்வு உள்ளது. அடுத்ததாக, ரிட்டயர்டு அசிஸ்டன்ட் மேனேஜர் கணபதி சுப்ரமணியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை செய்தவர்.
கணபதி அவர்களை பொறுத்த வரையில், உழைத்து வியர்வை சிந்தி, சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய ஒரே ஒரு சொத்தான சென்னையில் உள்ள 2500 சதுர அடி கொண்ட பிளாட்டை, கல்வான் பள்ளத்தாக்கு போரில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்தாருக்கு கொடுக்கவேண்டும் என தானும் தன் குடும்பமும் விருப்பப்படுவதாக தெரிவித்தார். இதற்காக பழனி அவர்களுடைய துணைவியாருக்கு போன் செய்து பேசினோம். அவரும் இரண்டு குழந்தைகளோடு சென்னை வந்தார்.. தன் குழந்தைகளை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, எங்களிடம் பேசும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்த விஷயம் என்னவென்றால், " மத்திய மாநில அரசு போதுமான அளவு எங்களுக்கு பணம் கொடுத்து உள்ளது. நிலம் கொடுத்து உள்ளது. எனவே இந்த சொத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும் என சொன்னார்.
இருபுறமும் பெருந்தமையாக பேசும் நிகழ்விற்கு பிறகு, இரண்டு பேரையும் வற்புறுத்தி இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஒரு அற்புதமான ஒரு சரித்திர காட்சி நடந்தது. கணபதி அவர்கள், பழனியின் துணைவியார் பெயரில் டாஃகுமெண்ட் ரிஜிஸ்டர் செய்து, அவரது மனைவியிடம் கொடுத்து அலுவகத்தில் ஒப்படைக்க செய்தார். பின்னர் அவர் வரவும் இல்லை. அவரை தற்போது அழைத்து வந்து இந்த மேடையில் அமர வைக்க பாஜக பெருமிதம் கொள்கிறது.
அடுத்ததாக, ராஜாஜி மருத்துவமனை எதிரில், கேன்டீன் நடந்து வரும் ராஜீவ் தினமும் உணவு கொடுக்கிறார். இவரிடம் ஒரு பெண்மணி வந்து, உணவு மட்டுமே கொடுக்குறீங்க...கொஞ்சம் கஞ்சி கொடுத்தால் நன்றாக இருக்கும். சிகிச்சையில் இருப்பவர்கள் கஞ்சியை பருக தான் ஏதுவாக இருக்கும் என தெரிவிக்க, அன்று முதல் தினந்தோறும் 300 முதல் 400 பேருக்கு இலவசமாக கஞ்சி கொடுக்கிறார் ராஜிவ்.
டாக்டர் எச்.வி.அண்டே அவர்கள், அரசியல், ஆன்மீகம், இலக்கியவாதி என சொல்லிக்கொண்டே போகலாம். எந்த சப்ஜெக்டாக இருந்தாலும் பேசக்கூடிய மிகவும் சிறப்புவாய்ந்த மாமனிதர். தேசத்தின் மீது அதீத பற்று கொண்டவர். இவர்கள் ஐவரையும் ஒரு சேர மேடையில் காண்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம் என, 5 பேரின் பெருமைகளை அண்ணாமலை எடுத்துரைத்தார்.