பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என பேசுவதை நிறுத்துமாறும் பிரதமர் உயிருடன் திரும்பி வந்தவிட்டேன் என சொன்ன பின்பும் பாதுகாப்பு குளறுபடி என சொல்வது தவறான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன் இது குறித்து அவர் தெரிவித்ததாவது பிரதமரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது ஒரு தற்செயல்,பாதுகாப்பு கோளாறு என்று மட்டுமே இன்னும் பேசுவது அபத்தம்.
அதே போல விவசாய போராட்டம் என்ற வார்த்தை மொழுகலெல்லாம் கேவலமானது. நடந்திருப்பது சதித்திட்டத்தின் ஒரு பகுதி. இதில் இலக்காக வைக்கப்பட்டது எது என்பதை விசாரிப்பதும் பேசுவதுமே சரியாக இருக்கும்."நான் உயிரோடு விமான நிலையத்துக்கு வந்துவிட்டேன். முதல்வருக்கு என் நன்றியை உரித்தாக்குங்கள்" என பிரதமரே பதிவு செய்த பிறகு இதில் விவாதிக்க,குழம்ப என்ன உள்ளது?
நிர்மூடர்களுக்கும் அயோக்கியர்களுக்கும்தான் இந்த நிகழ்வில் 42 வது கோணம் வரை தெரியும் என மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் சுந்தர ராஜசோழன், மேலும் மற்றொரு பதிவு ஒன்றில் ஏன் விஐபி வாகனம் தடுத்து நிறுத்தப்படக் கூடாது என்பதற்கு உதாரணமாக வைக்கப்பட்ட காட்சி இது. என குருதிபுனல் திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றிணை பகிர்ந்து இருக்கின்றார்.
இந்த சூழலில் நேற்று தரை மார்க்கமாக நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமரின் வாகனத்தை மறித்து இதுபோன்ற சதி திட்டத்தில் ஈடுபட முயற்சிகள் நடைபெற்று இருக்கலாம் எனவும் இது போன்ற நடக்க வாய்ப்புகள் அதிகம் இருந்து இருக்கலாம் எனவும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வைரல் ஆகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :-