
கர்நாடகவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தராமையா கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் 1 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீட்டை அறிவித்தார். இது எதிர்க்கட்சியான பாஜகவிடம் பெரும் விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக ஹோலி தினம் அன்று இந்த தீர்மானத்தை கர்நாடக அரசு நிறைவேற்றியதால் இது இந்துக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த ஹோலி பரிசு என்றெல்லாம் விமர்சனத்தை அடுக்கி வந்தனர்.
இதற்கு கர்நாடக துணை முதல்வர் டிகேஎஸ் சிவகுமார், பாஜக பிரிவினைவாத அரசியலை பின்பற்றுவதாக குற்றம் சுமத்தி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, சீக்கியர்களாக இருந்தாலும் சரி, பௌத்தர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் நம் நாட்டின் குடிமக்கள். அனைத்து சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகங்களைப் பற்றியும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என கருத்தை வெளிப்படுத்தினார். இதனையெடுத்து பாஜக பதிலடியாக கொடுத்ததாவது காங்கிரஸ் "முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக" குற்றம் சாட்டிய பாஜக, காங்கிரஸ் "அரசியலமைப்புக்கு விரோதமாக மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை வழங்குகிறது" என்றும் குற்றம் சுமத்தியது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அறிவித்த ஒப்பந்தங்களில் 4 சதவீத ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒரு "லாலிபாப்" என்றும் மதத்தின் அடிப்படையில் எந்தவொரு இடஒதுக்கீடும் அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும் நீதிமன்றங்களால் அது ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், மதத்தின் அடிப்படையில் எந்தவொரு ஒதுக்கீட்டையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்த ஒதுக்கீடு நடைபெற்றதால் நீதிமன்றம் மூலம் இதனை தடுப்போம் என தெரிவித்தார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்து, உள்துறை அமைச்சர் கூறுகையில், எதிர்க்கட்சியே கடந்த காலங்களில் இதுபோன்ற ஒரு முயற்சியை எதிர்த்துள்ளது. 2011 ஆம் ஆண்டில், காங்கிரஸ் சாதிகள் குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தினர், ஆனால் அதன் முடிவை அறிவிக்கவில்லை.நாங்கள் சில ஆலோசனை நடத்தி வருகிறோம் விரைவில் தீர்வு கிடைத்தவுடன் சாதி வாரி கணக்கெடுப்பு தொடருவோம் என அமித்ஷா காங்கிரஸ் கட்சிக்கும் திமுக கட்சிக்கும் விளக்கம் கொடுத்திருந்தார்.
கர்நாடகாவை போலவே தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக சமூக நீதி என்ற போர்வையில் இந்துக்களை இழிவுபடுத்திவிட்டு சிறுபான்மையின மக்களுக்கு என்று முக்கியத்துவம் கொடுத்து வாக்கு வங்கியை இழக்காமல் செய்து வருகிறது இதனால் நிச்சயம் 2026ம் ஆண்டு தேசிய கட்சி ஆட்சிக்கு வந்து திமுகவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்துக்களை திமுக அமைசர்கள் இழிவுபடுத்தி வருகின்றனர் சமீபத்தில் திமுக எம்பி ஆ, ராசா இந்துக்கள் கயிறு கட்டுவது குறித்தும் போட்டு வைப்பது குறித்தும் பேசினார்.
இதுவே ஒரு சிறுபான்மையின சமூகத்தை சார்ந்த இஸ்லாமியரோ அல்லது கிறுத்தவரிடமோ பேசமுடியுமா என்ற கேள்வியை காவி படைகள் எழுப்பி வருகின்றனர். மோடி அனைவருக்கும் சமமான மேம்பாட்டை கொடுத்துவருகிறார் இது தான் இந்தியா விரைவில் திமுக போன்ற எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திலும் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.