Politics

உண்மையை போட்டுடைத்த அமித்ஷா... அமைதியான பப்பு & பேமிலி போடு செம்ம மாஸ்...!

amitsha , rahulganthi
amitsha , rahulganthi

கடந்த பிபரவரி மாதம் இந்தியாவுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பலரும் ஆதரித்து வந்தனர், பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மாதம் வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகையில் எதிரிக்கட்சி தலைவர் ராகுல்காந்தி தன்னை பேச அனுமதிப்பதில்லை என பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார், இவருக்கு பாஜக தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது தெரிவித்த கருத்து அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது.


கடந்த மாதம் 27ம் தேதி மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவையில் பேசுவதற்காக எழுந்த போது, சம்மந்தமின்றி அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இது குறித்து கவலை தெரிவித்த ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அவையில் பேசுவதற்கான அரசியலமைப்பு உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பேச விடாமல் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் விவகாரம் உள்ளிட்ட 8 முக்கிய பிரச்னைகள் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடிதம் கொடுத்து வந்தனர். அப்போது எதிர்க்கட்சி எம்பி தெரிவித்ததாவது அவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச எழுந்து நிற்கும் போது அவர் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவது நாடாளுமன்ற நடைமுறைகளை உடைத்து, மக்களவையில் ஆரோக்கியமான விவாதத்திற்கான வாய்ப்பை நிராகரிப்பதற்கு சமம்.

நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி, அனைத்து உறுப்பினர்களும் விவாதம் செய்யவும், தங்கள் அரசியலமைப்புப் பணிகளைச் செய்யவும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். முன்னதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தள பதிவில், மக்களவை நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் காந்தி தனது சகோதரியும் எம்பியுமான பிரியங்கா காந்தியின் கன்னத்தை பாசத்துடன் தட்டியதால் சபாநாயகரின் எச்சரிக்கைகள் எழுந்தன என கண்டனத்தை பதிவிட்டிருந்தார். 

இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் நாடாளுமன்றத்தில் விதிகள் உள்ளன. பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ​​அவர்களுக்கு நேரம் வழங்கப்பட்டது, யார் பேசுவார்கள் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை எப்படித் தடுக்க முடியும்? என்று அவர் கேட்டார். உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்ற வேண்டும் என்று கூறினார். மேலும், ராகுல்காந்தி வியட்நாம் சென்றார், நாடு திரும்பிய பிறகு அவர் எப்படிப் பேசுவார் என்று சொல்ல முடியும்?

அது எப்படி சாத்தியம்? இது இந்திய நாடாளுமன்றம். இது ஒரு கட்சி அலுவலகம் அல்ல, ஒருவர் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன தனது கட்சியில் தனக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காது என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும் என்ற அறிவுரையை வழங்கி மக்களிடத்தில் அனுதாபம் ஏற்படுத்த இப்படி ஒரு நாடகம் போட்டால் அது எடுபடாது என கூறினார்.. ராகுல்காந்தியின் இந்த செயல்பாடுகள் விமர்சனத்தை மட்டுமே பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.