Politics

விஸ்வரூபம் எடுக்கும் RSS இனி இது நடக்கும்...! அமிட்ஷா வார்த்தையால் நேரடியாக சொன்ன விஷயம் படு வைரல்!

pmmodi
pmmodi

ஆர்.எஸ்.எஸ். நிறுவன தினத்தை முன்னிட்டு, அதன் உறுப்பினர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்து வட கிழக்கு மாநில மக்களை பிரதான நீரோட்டத்துடன் இணைப்பதில் வாழ்நாள் முழுவதும் பங்களித்த காந்தியவாதி நட்வர் தக்கரை அவர் பாராட்டியது மொத்த காவிப்படைகளுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


மத்திய அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் டைம்ஸ் நவ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் {ஆர்எஸ்எஸ்}  1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நாக்பூரில் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் நிறுவப்பட்டது. தற்போது 100 வருடத்தை தொட்டுள்ளது அடுத்து ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் அனைத்து தன்னார்வலர்களுக்கும் அதன் நிறுவன நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த அமைப்பு ஒழுக்கம் மற்றும் தேசபக்தியின் தனித்துவமான சின்னமாகும் அதன் தொடக்கத்திலிருந்தே, இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும், இளைஞர்களை ஒழுங்கமைப்பதிலும், அவர்களில் தேசபக்தியின் கருத்துக்களைப் புகுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பணியைச் செய்து வருகிறது," என்று அமித்ஷாதனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சமூக சேவைப் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலமும், அதன் கல்வி முயற்சிகள் மூலமாகவும், நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புள்ள தேசபக்தர்களை உருவாக்குவதன் மூலமும், ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொரு பிரிவையும் அதிகாரப்படுத்துகிறது என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி பல இளைஞர்களை நாட்டிற்காக உழைக்க ஊக்கப்படுத்தியதாகவும், நட்வர் பாயின் வாழ்க்கை வரைபடத்திலிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். வடகிழக்கு மாநிலமான திரிபுரா, சிக்கிம், மேஹலயா, மணிப்பூர் உள்ளிட்ட ஏழு மாநிலத்தை தேசிய நீரோட்டத்துடன் இணைப்பதில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் இதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது என்பதை பெருமையுடன் கூறியுள்ளார். 

மேலும், இந்தப் பகுதியில் பணியாற்றிய 272க்கும் மேற்பட்ட முழுநேர ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்களில் 10 பேர் உயிரிழந்தனர், அவர்களில் நான்கு பேர் திரிபுராவில் நீண்ட காலமாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து உத்வேகம் பெற்று அங்கு பணியாற்றிய பல நிறுவனங்கள் உள்ளன. பாஜக அரசு ஆட்சிக்கு வரும்போதெல்லாம், வடகிழக்கு மாநிலத்தை நாங்கள் முன்னணியில் கொண்டு வந்தோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ​​அவர் நன்கொடை அமைச்சகத்தை அமைத்தார். பின்னர் எங்கள் அரசு வெளியேறிய பிறகு அது செயலற்றதாகிவிட்டது. மீண்டும் மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது, ​​நன்கொடை அமைச்சகம் மீண்டும் உயிர் பெற்றது என பெருமையுடன் தெரிவித்தார். 

ஆர்எஸ்எஸ் இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும், இளைஞர்களிடம் தேசபக்தியின் கருத்துக்களைப் புகுத்துவதிலும் இந்த அமைப்பு குறிப்பிடத்தக்க பணியைச் செய்து வருகிறது என புகழாரம் சூட்டினார் உள்துறை அமைச்சர் அமித்ஸா தனது 16 வயதில் ஆர் எஸ்எஸ் மீதான பற்றால் தன்னை ஈடுபடுத்தி கொண்டு பணி செய்தார். இன்னும் வரும் நாட்களில் RSS பணி சிறப்பாக செய்யும் என்றும் கூறப்படுகிறது.