திமுக குடும்ப அரசியலில் ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
திராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து உறையாற்றிய கி. வீரமணி, கிராபுரங்களில் இருக்கும் பெரும்பாலான டீக்கடைகளில் இரட்டை குவளை முறை வழக்கத்தில் இருந்தது. அதை நாங்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தான் எதிர்த்து குரல் கொடுத்து போராடி அகற்றினோம்.
மேலும், டீக்கடைக்கும் சற்று தள்ளி போய் பார்த்தால், டாஸ்மாக் மதுபானக் கடையில் ஒற்றை குவளை முறை நடைமுறையில் இருந்தது. மதுபானக் கடையின் உள்ளே மது அருந்துபவர்கள் பிரதர் என்று ஆங்கிலத்தில் சொல்கிறான். அப்போது சாதி எங்கே போனது. நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காதை அரை டம்ளர் சாரயம் சாதிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா??? என கி.வீரமணி பேசியிருந்தார்.
இதனை கண்டித்து தமிழக பாஜக துணைத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் வெட்கப்பட வேண்டியது கி.வீரமணி தான். அரும்பாடுபட்டு சாராய சாம்ராஜ்யத்தையும், சாராய ரௌடிகளையும் அடக்கி, ஒடுக்கி மது விலக்கை அமல்படுத்தி, தமிழகத்தை நேர் பாதையில் நிறுத்தியது ராஜாஜி.1971 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது சாராய ஆற்றை தமிழகத்தில் ஓடச் செய்து புளகாங்கிதம் அடைந்த கும்பலை ஆதரித்து கொண்டிருப்பதற்காக வீரமணி தான் வெட்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சாராயம் போயிற்றே, வருமானம் எங்கிருந்து வரும்? என்ற கேள்விக்கு பணம் படைத்தவர்களிடம் வரி விதித்து, ஏழை எளியவர்களை காப்பதே அரசின் கடமை என்று சொல்லி மது விலக்கை அமல்படுத்தினார் ராஜாஜி. ஆனால் அந்த பணம் படைத்தவர்களுக்கு விதிக்கப்பட்ட வரியில் சமரசம் செய்து கொண்டு, ஊழல் பல செய்து, டாஸ்மாக் கடையின் வருமானத்தை அதிகரிக்க இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகளை உருவாக காரணமாக விளங்கி கொண்டிருக்கும் திமுகவினரின் பக்கம் நிற்பதற்கு வீரமணி போன்றவர்கள் தான் வெட்கப்பட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் தீண்டாமைக்கு எதிராக 1920 ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தவர் ராஜாஜி அவர்கள். ரஜாஜியின் ஆட்சியில் தான் ஆதிக்க சக்திகளின் அடுக்குமுறைக்களுக்கு எதிராக பட்டியிலன மக்களை கோவிலுக்கு செல்ல சட்டமியற்றப்பட்டது என்பதை அறிந்தும், ராஜாஜி அவர்களின் சாதியை இழித்தும், பழித்தும் பேசிவருவதற்கு வெட்கப்பட வேண்டியது கி. வீரமணி போன்றவர்கள் தான்.
தூத்துக்குடி மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூர அரக்கர்களை கைது செய்யாமல் இருக்கும் திராணியற்ற திமுக அரசை பாராட்டி கொண்டிருக்கும் கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும். மேலும் சமூக நீதி காத்தோம் என்று சுமார் 50 ஆண்டுகளாக மார் தட்டி கொண்டும், சாதி அரசியலில் ஊறித்திளைத்து போன தமிழகத்தில், வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்ற பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.