தமிழகத்தில் பாஜகவை குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அமிட்ஷா ஆகியோரை எதிர்ப்பவர்கள் டெல்லிக்கு சென்றால் அப்படியே தங்கள் போக்கை மாற்றி கொள்கிறார்கள் என்று பாஜக பிரமுகர்கள் சொல்லிவந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஒருவருடன் பேசி கொண்டே நடந்து வர டி.ஆர்.பாலு அமிட்ஷாவை பார்த்து ஒரு வணக்கம் வைக்கிறார், அவர் அருகில் இருந்த. திருமாவளவன் தன் பங்கிற்கு அமிட்ஷாவிற்கு வணக்கம் வைக்க முயல்கிறார், ஆனால் அமிட்ஷா அதனை கவனிக்கவில்லை, திரும்பவும் அமிட்ஷா செல்லும் வழியில் திருமாவளவன் செல்கிறார்.
முழுமையான வீடியோ காட்சிகள் இல்லாத சூழலிலும் பரவும் காட்சிகள் திருமாவளவன் போன்றோர் தமிழகத்தில் பேசும் பேச்சிற்கும் டெல்லியில் நடந்து கொள்ளும் செயல்பாட்டிற்கும் வேறு மாதிரியாக உள்ளது என பலரும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர், goback மோடி goback அமிட்ஷா என தமிழகம் வந்தால் பேசவேண்டியது, சனாதானத்தை வேறு அறுப்போம் என பேசவேண்டியது..,
டெல்லிக்கு சென்றால் அப்படியே மாற வேண்டியது என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுக்கின்றது, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் திருமாவளவன் அமிட்ஷா உடல்மொழி குறித்து பேசினார் அதில் த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) பற்றி பேசிய திருமாவளவன் ,“குடியுரிமை திருத்த மசோதாவை அமித்ஷா நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். பின்னர் அது குறித்தான கருத்துகள், வாதங்கள் நடந்தன. அந்த நேரத்தில் அமித்ஷாவின் உடல்மொழி, அவர் சைகை, அவர் பேச்சுக்கு ஆற்றிய எதிர்வினை, நடந்து கொண்ட விதம் என எல்லாம் மிகப் பெரிய அச்சுறுத்தலைத் தந்தன. அந்த மசோதாவைவிட இந்த செயல்தான் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது என குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஆனால் தற்போது இணையத்தில் பரவும் வீடியோ காட்சிகள் திருமாவளவனின் உடல் மொழி வேறு விதமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு கிண்டல் அடித்து வருகின்றனர், அமிட்ஷா உடல் மொழி குறித்து பேசிய திருமா தோழமை சுட்டுதல் போன்று, எதிர்ப்பு சுட்டுதல் வணக்கம் என்ற புது வார்த்தையை உபயோக படுத்தாமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் நெட்டிசன்கள்.அமித்ஷாவிற்கு திருமாவளவன் போட்ட வணக்கத்தை வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்.