Tamilnadu

மற்றொரு பிரபல தொலைக்காட்சி ஊழியர்களுக்கு அவசர உத்தரவு எல்லாம் ஜி தமிழால் வந்தது !

famous media's
famous media's

தமிழில் ஒளிபரப்பாகும் முன்னணி   பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்  ஒன்றில் குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், பிரதமர் மோடியை கிண்டல் செய்து காட்சி அமைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 


இது சமூக வலைதளங்களில் வைரலானத்தைத் தொடர்ந்து, அந்த நகைச்சுவை காட்சிக்கு பா.ஜ.க.-வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரதமர் மோடியின் மாண்பை குறைப்பது போல அந்த நகைச்சுவை காட்சி இருப்பதாகவும், இதனால் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் தெரிவித்தார்.

மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்

நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள் — K.Annamalai (@annamalai_k) January 16, 2022 இந்நிலையில் மாநில பா.ஜ.க. ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் தனது புகார் ஒன்றிணை அனுப்பினார் .

அதில், “கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி சேனலில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்தனர். அவர் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார்மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர்.

10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. இது தவறான செய்தியைக் கடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தை சேனல்திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும். சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளை அரசியல் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்படக்கூடாது” என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சூழலில் மத்திய தகவல் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் சம்பந்தபட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதில், புகார் மீது ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் குறிப்பிடபட்டு இருந்தது. இந்த சூழலில் மற்றொரு முன்னணி தனியார் தொலைக்காட்சியின் தமிழக தலைமை தனது பொழுது போக்கு மற்றும் ரியாலிட்டி ஷோ நடத்தும் தயாரிப்பாளர்கள், கதை எழுத்தாளர், எடிட்டர் ஆகியோருக்கு அவசர அவசரமாக தகவல் ஒன்றை கொடுத்துள்ளது.

அதில் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் நாடகங்கள் மற்றும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ ஆகியவற்றில் எங்கும் அரசியல் தலைவர்களை குறிவைத்து எந்த காட்சியும் வைக்க வேண்டாம் மேலும் அரசியல் ரீதியாகவோ முக்கிய சமூக பிரச்சனைகள் குறித்தோ எந்த இடத்திலும் காட்சி படுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கி இருக்கிறது.

முன்பெல்லாம் தமிழகத்தை சேர்ந்த கட்சி தலைவர்களை விமர்சனம் செய்தால் எதிர்ப்புகள் எழும், மத்தியில் ஆளும் பாஜக குறித்தோ பிரதமர் குறித்தோ மறைமுக விமர்சனம் செய்தால் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் துடிப்பாக இயங்குவதும், தமிழக பாஜக தலைமை உடனடி கவனம் செலுத்துவதும் இது போன்ற பொழுது போக்கு நிறுவனங்களில் மாற்றம் உண்டாக காரணமாக பார்க்க படுகிறது.