Tamilnadu

"உள்துறை அமைச்சகத்திற்கு" அறிக்கை அனுப்பினார் ஆளுநர்.. கடும் சிக்கலில் முதல்வர் ஸ்டாலின்.

Amitshah and Rn Ravi
Amitshah and Rn Ravi

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழகத்தில் நடைபெற்றுவரும் மதமாற்றம் தொண்டு நிறுவனங்களின் பண வரவு, தமிழக அரசின் தேசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பித்து இருப்பது முன்னணி நாளிதழ் மூலம் கசியவிடப்பட்டட்டுள்ளது.


இது குறித்து பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியின் முக்கிய சாராம்சம் பின்வருமாறு :-தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட நீட் எதுர்ப்பு மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்தார்.இது, கவர்னருக்கு அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

சட்டசபையில் உரை நிகழ்த்தும் போது, 'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழ், வாழிய பாரத மணித் திருநாடு, ஜெய்ஹிந்த்' என்று கூறி, கவர்னர் தன் உரையை நிறைவு செய்ததாக தெரிகிறது. தமிழக அரசு வெளியிட்ட கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை மட்டும் இடம் பெறவில்லை. இதுவும் கவர்னருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி, தமிழகத்தில் நடந்து வரும் சில செயல்களால்,கவர்னர் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக ஒரு அறிக்கையை, சமீபத்தில் கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் மதமாற்றம், சில என்.ஜி.ஓ., அமைப்புகள் வாயிலாக வரும் வெளிநாட்டு பணம், பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவை குறித்து, மூன்று பத்திகளில் அந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது என பிரபல நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் காவல்துறையின் செயல்பாடு, சமீபத்தில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பின் தரம் மற்றும் அதன் பின்பு தவறை சுட்டிக்காட்டிய நபரை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்தது அவரது மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது என அந்த அறிக்கையில் முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சட்டம் ஒழுங்கு  விவகாரத்தில் மாநில அரசு சமரசம் செய்வதாகவும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்ட பின்புலத்தில் முன்பே தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பஞ்சாப் போன்று தமிழகத்திலும் சட்ட ஒழுங்கு பிரச்னையை சில அமைப்புகள் உண்டாக்க காரணமாக சில இயக்கங்கள் சதி செயலில் ஈடுபடகூடும் என அறிக்கையை உள்துறை அமைச்சகத்திற்கு அளித்ததாக கூறப்படுகிறது,

ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்தவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மிக முக்கிய சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவர இருப்பதாகவும் இதன் மூலம் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க மத்திய அரசு முடிவுகள் எடுத்து இருப்பதாக கூறபடுகிறது.