
தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய அவர், அடிப்படை உறுப்பினர்களால்தான் அதிமுக தலைமைப் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்ஜிஆரின் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.
இதனை போன்று விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய சி வி சண்முகம் கடுமையாக ஆளும் அரசையும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளையும் விமர்சனம் செய்தார் தமிழக அரசை ஸ்டாலின் நடத்தவில்லை அவரது துணைவியார், உலக ஆணழகன் உதயநிதி, ஸ்டாலின் மருமகன் மூவரும்தான் நடத்துகின்றனர் என பேசினார், அதன்பின்பு.,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலியே சோதனையிடுவோம். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றார்.இதனைத்தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் மீது அவதூறு பரப்புவதாக கூறி மாரிதாசை கைது செய்த காவல்துறையால் பாஜக மாநில மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள்.
உங்களுக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைவரை கைது செய்து பாருங்கள் பார்ப்போம் என தெரிவித்தார். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்டதில் வடமாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சரின் தூண்டுதல் இருக்கிறது என்றும் குற்றசாட்டினார்.