Tamilnadu

மிகவும் முக்கியமான சம்பவம் நடந்து இருக்கிறது.. மத்திய அரசின் அதிரடி முடிவு!

modi
modi

இந்தியாவின் தொழில்நுட்பத்தில் மாற்றத்தை உண்டாக்கும் வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, மகத்தான விஷயம் நடந்திருக்கிறது. அனைத்து வகை எலக்ட்ரானிக் சாதனங்களின் இதயமாக திகழும் Chipகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 10 பில்லியன் டாலர்களை (இன்றைய மதிப்பில் சுமார் 76000 கோடிகள்) உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக அறிவித்து ஒதுக்கீடு செய்துள்ளது.


சர்வதேச chip உற்பத்தியாளர்கள் தங்களது விருப்பத் தேர்வாக இந்தியாவை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இதன்மூலம் நன்கு அதிகரித்துள்ளன.உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை என்பதால் chip உற்பத்தித் துறையில் அந்நிய முதலீடு வெள்ளம் போல பாயும் வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக உள்ளூரில் ஒரு வலுவான உற்பத்தி எக்கோ சிஸ்டம் உருவாகும். படித்த, திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பல விதங்களிலும் உருவாகும். 

Make in India திட்டத்தின் கீழ் இந்தியாவை ஒரு சர்வதேச உற்பத்தி  மையமாக மாற்றியே தீர்வது என்று உறுதியாக முடிவெடுத்து செயல்படுகிறது அரசு. இதுவரை ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை சுமார் 2,30,000 கோடிகள் எனும்போது அரசின் seriousness புரியும்.   வெள்ளைக்கார கம்பெனி உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரித்து அதனை கொள்ளை லாபத்தில் விற்ற இந்தியா என்ற இடத்திலிருந்து உலகின் எலக்ட்ரானிக் chip தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்புள்ள நாடாக இந்தியா மாறுகிறது என்ற இடத்திற்கு வந்தடைந்துள்ளோம். காரணம் மோதி என்ற ஒற்றைச் சொல். மந்திரச் சொல். என குறிப்பிட்டுள்ளார் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன்.

உலகின் சிப் சந்தையை சீன நிறுவனங்களே ஆக்கிரமித்து இருக்கும் சூழலில் அதனை மாற்றவும் அந்த இடத்தை இந்தியா பிடிக்கவும் மிகப்பெரும் முயற்சியை செய்துள்ளது மத்திய அரசு இனி வரும் காலங்களில் இந்தியாவில் இருக்கும் பொருட்கள் இந்தியாவை மையமாக கொண்டு உருவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.