"ரிவிட் இருக்கிறது" இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டிவிட்ட அண்ணாமலை மிரண்ட பத்திரிகையாளர்கள் !annamalai ips
annamalai ips

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு காரசாரமாக பதில் அளித்தார் அண்ணாமலை அதிலும் குறிப்பாக தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு அவர் அளித்த பதில் மிகவும் கவனத்துக்குரிய பார்க்கப்படுகிறது .

பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்தது குறித்து அண்ணாமலை மிகவும் தவறான செயல் எனவும் இது போன்ற பல காரியங்களை திமுக அரசு  வருங்காலங்களில் செய்தால் மிகவும் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கூறினார் அத்துடன் காவல்துறை அதிகாரி பாஜகவின் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசனிடம் நடந்துகொண்டது குறித்தும் அது தவறான முன்னுதாரணம் என்றும் அப்படி நடந்து கொண்ட காவல் அதிகாரி மீது வழக்கு தொடர இருப்பதாகவும் வழக்கை சந்திக்க இருப்பதாகவும் அண்ணாமலை அதிரடியாக தெரிவித்தார்.

கல்யாணராமன் மீது வேண்டும் என்றே  வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் துணை அமைப்பை கொண்டு திட்டமிட்டு இருப்பதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார் அதேவேளையில் வழக்கை முறைப்படி சந்திக்க இருப்பதாகவும் கல்யாணராமன் கட்சி துணை நிற்கும் என்றும் அவர் கூறினார். மேலும் பாஜக ஒன்றும் கோபாலபுரத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி இல்லை என்றும் கட்சியில் வெற்றிபெற்றவர்கள் தோற்றவர்கள்.,

அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும்  நடத்தப்படும் என்றும் தெரிவித்தார், இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் மிகவும் ஆவேசப்பட்டு கேள்வி எழுப்ப நீங்கள் ஒன்றும் கோபாலபுரத்தில் பிறக்கவில்லையே உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது நான் என்னுடைய விமர்சனத்தை வைத்தால் பத்திரிகையாளரான  உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் அண்ணாமலை , இதைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆடி போய் விட்டனர்

 பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது போடப்பட்ட வழக்கை போன்று பத்திரிகையாளர்கள் பலரும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிரதமர் மோடி குறித்தும் இந்தியா குறித்தும்,ஆட்சி குறித்தும் மிகவும் தவறாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள் அவர்கள் மீதும் வரும் காலங்களில் நிச்சயம் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி பட தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர்கள் பேசினால் கருத்து சுதந்திரம் அதே நேரத்தில் கட்சிக்காரர் பேசினால் கருத்து சுதந்திரம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது, இன்று அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு கடுமையான பதிலடி கொடுக்க திட்டமிட்டு உருவானது போன்ற தோற்றத்தில் காணப்பட்டதால் பல பத்திரிக்கையாளர்கள் தாங்கள் முன்வைக்க வந்த கேள்விகளை வைக்காமலேயே அமைதியாக இருந்தனர்.

முன்பு பல ஊடகங்கள் வேலை செய்த முக்கிய பணியாளர்கள் பலர் தங்கள் வேலை இழந்தது போன்று இப்போதும் பொது ஊடகங்களில் பணியாற்றும் பலர் குறிப்பிட்ட கட்சிக்கு விசுவாசமான காரியத்தை செய்வதற்காக வேண்டும் என்றே பாஜக மீது பழி போடுபவர்கள்  மீது டார்கெட் செய்து ரிவிட் அடிக்க போகிறார் அண்ணாமலை என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த காரசாரமான வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out