தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கொடுத்த பேட்டி ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் மீண்டும் சூடுபிடிக்க செய்துள்ளது, இந்தமுறை பாஜக பிரமுகர் கல்யாணராமனை மீட்க வழக்கறிஞர் அணி களத்தில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்ததும் கல்யாணராமன் உடன் பாஜக நிற்கும் என அவர் குறிப்பிட்ட கருத்துக்களும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
அதன் பிறகு குறிப்பிட்ட அமைச்சர் ஒருவர் தனியார் கம்பெனி ஒன்றை கைப்பற்றி அந்த நிறுவனத்திற்கு தமிழக மின்சார துறையில் இருந்து ஒப்பந்தம் வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இதில் பெரும் ஊழல் உள்ளது எனவும், ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் பட்சத்தில் மிக பெரிய பின்விளைவை சந்திபீர்க்கள் எனவும், அனைத்து ஆவணங்களையும் ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என தெரிவித்து இருந்தார் அண்ணாமலை.
இவற்றை தாண்டி தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் எழுப்பியகேள்விக்கு அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்தார் அண்ணாமலை வார்த்தைக்கு வார்த்தை அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரை அழுத்தி அழுத்தி கூறினார் அண்ணாமலை மேலும் நாங்கள் திமுகவை விமர்சனம் செய்தால் உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது என அண்ணாமலை அந்த தனியார் தொலைக்காட்சி பெயரை அழுத்தமாக பதிவு செய்தார்.
மேலோட்டமாக பார்த்தால் இது அரசியல் வாக்குவாதம் போல தோன்றினாலும் இதன் பின்னணி மிகவும் சுவரஷ்யமாக உள்ளது, அண்ணாமலை குறிப்பிட்ட தனியார் நிறுவனம் தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் பல கோடி ரூபாயை சம்பாரித்து வருகிறது, இதுவே இந்த நிறுவனத்தின் மூலதனம், மேலும் புதிதாக மராட்டிய மொழியிலும் அதே நிறுவனம் புதிய சேனலை தொடங்குகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சேவை தங்கு தடையின்றி நடந்து வருகிறது, ஆனால் முழுக்க முழுக்க பாஜகவிற்கு எதிராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மாநிலங்களிலும் வருமானத்தை பெற்று வருவதை தடை ஏற்படுத்தவே அண்ணாமலை அந்த நிறுவனத்தின் பெயரை அடிக்கடி உச்சரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால் எங்களை நீ இங்கே மொழி இனத்தை வைத்து தவறான செய்திகளை வெளியிட்டால் நாங்கள் ஆளும் மாநிலம் எங்கள் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களில் உங்கள் 'தொழில் நடப்பது' கேள்வி குறி என சிம்பாலிக்காக சொல்லி வருகிறாராம் அண்ணாமலை. அண்ணாமலை இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் 'தயாநிதி மாறனை' வாயை அடக்கவில்லை என்றால் இனி உங்கள் தொழிலில் கைவைப்போம் எங்கெல்லாம் என்ன செய்கிறீர்கள் என அனைத்து தகவலும் எங்களிடம் இருக்கிறது என எச்சரிக்கை விடுத்ததும் அதன் பிறகு தயாநிதி மாறன் சர்ச்சையில் சிக்காதது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் வாயே திறக்கவேண்டாம் என வாய்மொழி உத்தரவே போட்டுள்ளாதாம்.