தமிழகத்தில் நாளுக்கு நாள் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் அவர்களது மேடையில் பேசும் அக்கட்சி ஆதரவாளர்கள் செயல்பாடு கடும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது ,அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில் பேசிய சுந்தரவல்லி பேச்சு கூட்டணி கட்சியினரான திமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது .
ஜார்ச் கோட்டை எங்கள் அண்ணன் திருமாவிற்கானது என சுந்தரவல்லி பேசினார் அதாவது அடுத்த முதல்வராக அமர அனைத்து தகுதியும் திருமாவளவனுக்கு தான் என கூறினார் சுந்தரவல்லி , இதன் மூலம் ஸ்டாலினை முதல்வராக கூட்டணி கட்சியான விசிக ஏற்கவில்லையா அல்லது ஸ்டாலினை எதிர்க்க துணிந்துவிட்டார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது ,சுந்தரவல்லி பேசிய இந்த வீடீயோவை திருமாவளவன் பகிர்ந்ததும் கவனிக்க வேண்டிய ஒன்று என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள் .
மேலும் அதே கூட்டத்தில் சிறுத்தைகளை ஒன்றும் செய்யமுடியாது எனவும் விழுப்புரம் பாமக கோட்டை என்றார்கள் அங்குதான் சிறுத்தைகள் வெற்றி பெற்றோம் எனவும் கத்தி பேசி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார் , ஆனால் டெல்லி செங்கோட்டையில் அதாவது நாட்டின் பிரதமராக திருமாவளவன் வருவார் என சுந்தரவல்லி பேசியது விசிகவினரை உற்சாக படுத்தி இருக்கலாமே தவிர வெளியில் உள்ளவர்களை நகைச்சுவைக்கு உள்ளாக்கி இருக்கிறது .
மேலும் மாற்றம் முன்னேற்றம் என ஒன்று இருக்கிறதே என சுந்தரவல்லி ஒருமையில் பேசியது சீமான் உள்ளிட்ட பலரை அதே பாணியில் விமர்சனம்செய்தது தொடர்ந்து சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயன்று வருகிறார்களா ஒரு பக்கம் பிரதமர் குறித்தும் தமிழக காவல்துறை குறித்தும் அவதூறாக பேசினார் விசிக வன்னியரசு அதன் பிறகு துணை நடிகை ஷர்மிளா பிரதமர் குறித்து அவதூறாக பேசிவிட்டு அப்படிதான் பேசுவேன் என பேசினார் .
இப்போது சுந்தரவல்லி என எங்கெல்லாம் தவறாக பேசமுடியுமோ அங்கெல்லாம் பேசி வருகிறார்கள் ஆனால் இவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது , இருப்பினும் தமிழக அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் திமுக எம் எல் ஏ ஆகியோரை நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு ஜார்ச் கோட்டை எங்கள் அண்ணன் திருவளவனுக்கானது என சுந்தரவல்லி பேசியிருப்பது தமிழக அளவில் திமுகவை எதிர்க்க விசிக துணிந்துவிட்டதா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .