Tamilnadu

"அண்ணாமலை" விமர்சனம் எதிரொலி புது வாய்மொழி உத்தரவு..! அதிரடி முடிவு எடுத்த டிஜிபி..!

Annamalai talk - DGP action
Annamalai talk - DGP action

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் அதில் திமுக அரசு குறித்தும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அண்ணாமலை, அண்ணாமலை பேச்சை கவனித்தவர்களுக்கு அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி என்பது தெரிந்து இருக்கும்.மாரிதாஸ் ட்வீட்டில் என்ன தவறு இருக்கிறது?கல்யாண் ராமன்  மீது ஒரு குண்டர் சட்ட வழக்கு போட்டு அவர் வெளியேறும் நிலையில், 3 மாதங்கள் கழித்து, மீண்டும் வேறு ஒரு குண்டர் வழக்கை போடுவது என்ன அரசியல்?


டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிளில் போய் ஃபோட்டோ எடுத்துப் போடுவதை விட்டு, உண்மையான வேலையில் இறங்க வேண்டும். தமிழக காவல் துறை டிஜிபி கட்டுப்பாட்டில் இல்லை. திமுக நிர்வாகிகள் தான் தமிழக காவல்துறையை நடத்துகிறார்கள்.சைலேந்திர பாபு டிஜிபி பதவியே பிரயோஜனமில்லாமல் இருக்கிறார். 

'மாரிதாஸ் ட்வீட் கருத்து சுதந்திரம்' என்று சொன்னதற்காக அந்த நீதிபதியை, 'அவர் பாரபட்சமானவர்' என்று சொல்லி அவரை நீக்க சொல்லும் திமுகவினர், 'முதல்வர் ஸ்டாலின் இடையறாது உழைக்கிறார்' என்று சொன்ன நீதிபதியையும் அவ்வாறே பாரபட்சமானவர் என்று சொல்வார்களா?மாரிதாஸ் ட்வீட் பற்றி நீங்கள் சொல்கிறீகள். என்னிடம் 300க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளன - திமுகவினரும் திமுக ஆதரவாளர்களும் அவதூறாக செய்த ட்வீட்டுகள் பற்றி. அதன் மேலும் ஏன் நடவடிக்கை எடுப்பார்களா? ஊடகங்களிடம் அவற்றை தந்தால் அதை நீங்கள் வெளியிடுவீர்களா?  என கொந்தளித்து பேசியிருந்தார் அண்ணாமலை.

இது மேலோட்டமாக அரசியல் விமர்சனமாக தெரிந்தாலும்.. காவல்துறை வட்டாரத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது காரணம் அண்ணாமலை விமர்சனம் வைத்தது காவல்துறை தலைவர் மீது சட்டம் ஒழுங்கு டிஜிபியை மாநில அரசு மட்டும் தேர்வு செய்வது இல்லை, மாநில அரசு அனுப்பும் பட்டியலில் குறிப்பிட்ட ஒருவர் பெயரை மத்திய தேர்வு ஆணையமே இறுதி செய்யும்.

அந்த வகையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வில் மத்திய அரசிற்கு மிக பெரிய பங்கு உண்டு மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யும் அதிகாரி மாநில அரசின் கீழ் சென்று ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட கூடாது என்ற காரணத்தால்தான் டிஜிபியை மத்திய மாநில அரசுகள் இணைந்து தேர்வு செய்கின்றன.

இப்படி இருக்கையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி கையில் இல்லை எனவும் திமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பதாக குற்றம் சுமத்தி இருப்பது மத்திய அரசின் அதிருப்தியாகவே பார்க்க படுகிறது, இந்த சூழலில்தான் நேற்றைய தினம் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சைலேந்திர பாபு.

இனி அரசியல் சார்பாக குண்டர் சட்டம் போடுவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையாக இருந்தாலும் எனது அலுவலகத்திற்கு தகவல் வரவேண்டும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும் எதிர் தரப்பில் வைக்கும் குற்றசாட்டுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைவருக்கும் ஒரே அளவுகோளை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.விரைவில் தமிழக ஆளுநரை சந்தித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளிக்கவும் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.