தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிணையில் வெளிவருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்து மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசும், தமிழக காவல்துறையும் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மத்திய அரசு இந்திய இராணுவம், பிரதமர் மத்திய அமைச்சர்கள் போன்றோரை இழிவாக பேச கூடிய பலரை தமிழக காவல்துறை கைது செய்வது இல்லை எனவும் மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவிற்கு எதிராக விமர்சனம் வைத்த பலரை திட்டமிட்டு கைது செய்து வருவதாக பட்டியல் போடுகின்றனர் பாஜகவினர் கிஷோர் கே சுவாமி, கல்யாண ராமன் தற்போது மாரிதாஸ் இதில் கல்யாண ராமனை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது தமிழக காவல்துறை , கடந்த 6 மாதமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்ட கிஷோர் விடுதலை செய்யப்படவில்லை.
தற்போது சாதாரண வழக்கு என அழைத்து சென்று மாரிதாஸை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தமிழக அரசு முயன்று வருவதாக கூறப்படுகிறது இப்படி திமுகவிற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது கடும் ஒடுக்கு முறையை திமுக அரசு காவல்துறை மூலம் கட்டவிழ்த்து வருவதாகவும் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில் இன்று காலை பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் விடை அளித்தனர் பேட்டியின் நடுவே பாஜகவை சேர்ந்த "கராத்தே தியாகராஜன்" இனி தமிழகத்தில் கர்நாடகா குஜராத் என அனைத்து மாநில போலீசும் நுழையும் பொறுத்து இருந்து பாருங்கள் என எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது, நேற்றைய தினமே தமிழகத்தில் நுழையும் புதுச்சேரி கர்நாடாக போலீஸ் என tnnews24- ல் சிறப்பு செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.