பாஜக அரசாங்கம் நாளை மிகப்பெரும் சாதனை ஒன்றை செய்ய இருப்பதாக எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :- பாஜக அரசு தன் இரண்டாம் சாதனையினை நாளை செய்கின்றது, மோடி எனும் அந்த அவதாரம் ராமர்கோவிலை தொடர்ந்து மிகபெரிய சரித்திர சாதனையினை நாளை அரங்கேற்றுகின்றது
மிகபெரிய சரித்திர சாதனை பல நூறு ஆண்டுக்கு பின் அரங்கேறுகின்றது, உலகில் எங்கும் நடக்காத ஒரு ஆச்சரியம் நாளை இந்தியாவில் நடக்க இருக்கின்றது இந்த உலகில் எத்தனையோ நாட்டின் நாகரீகங்களும் அடையாளமும் தனி சிறப்பும் அழிக்கபட்டன, ஒருமுறை இழந்தால் இழந்தது எனும் வகையில் அவை ஒழித்தொழிக்கபட்டன
எகிப்திய மதம், ரோமையர் அடையாளம், கிரேக்கர் மதம் கலாச்சாரம் என உலகின் உன்னத அடையாளங்கெல்லாம் மேற்காசிய மதங்களால் அடக்கி ஒழிக்கபட்டு புதைத்தபின் எழவே இல்லை, இன்று அவற்றின் எச்சமே இல்லை, இதே மிரட்டல்தான் இந்துமதம் மேல் ஏவபட்டது, உலகில் இஸ்லாம் கிறிஸ்தவம் என இருபெரும் தாக்கங்களை கண்ட மதம் அது, அதற்கு முன்பே பவுத்தம் சமணம் என மாபெரும் சவால்களையெல்லாம் அது எதிர்கொண்டு மீண்டது.
அது இன்றளவும் ஆச்சரியம் மகா ஆச்சரியம், அது வீழும் பொழுதெல்லாம் யாராவது ஒருவர் வந்து அந்த தர்மத்தை ஏற்றி வைப்பார்கள், பவுத்த காலத்தில் இந்து எழுச்சி ஆதிசங்கரர் என தெற்கில் இருந்து ஒரு மகானை எழுப்பி தன்னை காத்தது, ஆப்கானியர் காலத்தினிடையே விஜயநகர அரசுகள் ஓரளவு காத்த நிலையில் அதன் பின் முழு இந்தியாவினையும் அவுரங்கசீப் விழுங்க நினைத்தபொழுது புயலென எழுந்து அதை தடுத்தான் வீரசிவாஜி
சிவாஜி கொடுத்த எழுச்சிதான் பின் வெள்ளையன் காலத்தில் ஆப்கானியரிடம் இருந்து தேசத்தை மீட்டது எனினும் கிறிஸ்தவ வெள்ளையன் அதை ஆள தொடங்கினான், அவன் ஆட்சியினை எதிர்த்து தேசம் போராடி மீண்டபின் முதன் முதலில் துலங்கியது சோமநாதபுரி ஆலயம்.
ஒரு விஷயத்தை ஒப்புகொள்ள வேண்டும், இங்கு இந்து எழுச்சியினை பிற்காலத்தில் தொடங்கி வைத்தது விவேகானந்தர் என்றாலும் அதை அணையாமல் மீட்டெடுத்தன் இந்து இயக்கங்கள் அதில் ஒன்றுதான் இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்கள், அந்த அமைப்புக்கள் உருவாக்கிய உன்னத சீடர்களில் ஒருவரான "மோடிதான்" ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
அந்த ராமர்கோவில் மீண்டது மாபெரும் ஆச்சரியம், மகா ஆச்சரியம், இன்றும் என்றும் உலக வரலாற்றில் நிற்கும் பெரு ஆச்சரியம், அத்தனை நூறு ஆண்டுகள் கழித்து அது எழுவதெல்லாம் சாமான்யம் அல்ல, அந்த சாதனையின் தொடர்ச்சியாக நாளை காசியில் அந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தின் புதிய வளாகம் நாளை திறக்கபடுகின்றது, மோடி அதை திறந்து வைக்கின்றார்.
இந்துக்களின் தலை நகரம் காசி, ஞான நகரம் காசி, பாரத கண்டத்தின் தலைவிதி அங்கு இருந்துதான் இயங்கும் எனும் அளவு ரிஷிகள் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே உருவாக்கிய ஞான ஏற்பாடு அந்த பூமி, அது ஆப்கானியர் ஆட்சியில் சிக்கியது என்றாலும் இந்துக்கள் அதை தக்கவைக்க போராடி கொண்டேதான் இருந்தனர்.
"காசி வாழ வாழ இத்தேசம் வாழும், காசி வீழ்ந்தால் இத்தேசம் வீழும்" என்பது முக்கால உண்மை, காலமெல்லாம் போராடிய சிவாஜி காசியில் கால்வைத்த பின்புதான் இந்துக்களின் அதிபதியாக முடிசூட்டி கொண்டான்,அவன் காலத்துக்கு பின் காசி சுல்தான் பிடியில் சிக்கினாலும் தமிழக சித்தஞானி குமரகுருபரர் சிங்கத்தின் மேல் அமர்ந்து அரபுமொழி பேசி காசி ஆலயத்தின் உரிமையினை மீட்டு கொடுத்தார்.
ஞானியர் எப்பொழுதும் முழு காரியமும் முன்னின்று செய்யமாட்டார்கள், தொடங்கி வைத்துவிட்டு அவர்கள் போக்கில் செல்வார்கள், பின் வருபவர்தான் தொடரவேண்டும் ஆனால் ஏனோ பிற்காலத்தில் யாரும் வரவில்லை சிக்கல் நீடித்தது.சிவாஜியும், குமரகுருபரரும் மட்டும் இல்லாது போயிருந்தால் காசி எனும் அடையாளமே அழிந்திருக்கும், அழிந்துவிட்ட அதை மீட்டெடுக்க வழி இல்லாமல் போயிருக்கும்
காசி மீட்பில் அந்த இருவரையும் ஒரு காலமும் மறக்கமுடியாது, காலவோட்டத்தில் வெள்ளையரும் வந்து ஆள காசி கவனிப்பாரற்று நாசமானது, கல்கத்தாவினை விட மோசமானது.இந்தகாலகட்டத்தில்தான் பாஜக எழும்பிற்று மோடியும் எழும்பினார், மோடி சில அற்புதங்களை நிகழ்த்திகாட்ட வந்த ஒரு அவதார பிறப்பு, காலம் சில காரியங்களை அவர் மூலமேதான் செய்துகொண்டிருக்கின்றது, அதில் முதலாவது ராமர்கோவில்
இரண்டாவது விஷயம் இந்த காசி புணரமைப்பு, மோடி நினைத்திருந்தால் குஜராத்தில் இருந்து எளிதாக எம்பி ஆகியிருக்கலாம் ஏன் தேர்தலில் நிற்காமலே மன்மோகன் வழியில் பிரதமராகியிருக்கலாம், ஆனால் காசியில்தான் நிற்பேன் என வந்து வைராக்கியமாக நின்று வென்றார், வென்றவர் மெல்ல காரியத்தில் இறங்கினார், முதலில் கங்கையினை சுத்தபடுத்தி நீர்வழி சாலையினை ஏற்படுத்தி அதை ஒழுங்கு செய்து அடுத்தகட்டமாக காசிகோவிலுக்கு வந்தார்.
ராமனுக்கு லட்சுமணன் போல அவருக்கு தோதாக யோகியும் உபியில் முதல்வரானார், இருவரும் வேறு எதனை யோசிப்பார்கள்? காட்சிகள் அரங்கேறின..முடியவே முடியாது என்ற நிலை மாற்றபட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டு மிக நேர்த்தியாக சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன் இருந்த காசி ஆலயம் மறுபடி உருவாக்கபட்டுவிட்டது, வளாகம் இன்று மிக சுத்தமாக காட்சியளிக்கின்றது.
அங்கு இருந்த மிகபெரும் தவறு அக்கோவிலின் நந்தி காசி விஸ்வநாதரை பாராமல் வேறு திசையில் எங்கோ இருந்தது, ஆக்கிரமிப்புகள் இதர விஷயங்களால் இது வெகுநாள் கவனிக்கபடாமலே இருந்தது, மோடி ஆட்சியில் இது கண்டறியபட்டு சுமார் 350 ஆண்டுக்கு பின்னால் அதாவது தமிழக சித்தர் குமரகுருபரர் காசி சென்று அந்த ஏற்பாடுகளை செய்த காலத்துக்கு பின்னால் இப்பொழுதுதான் அந்த நந்தி ஆலயம் நோக்கி திருப்பபடுகின்றது
இந்த சரித்திர சம்பவத்தின் அரங்கேற்றம் நாளை காசியில் நடக்கின்றது, கார்த்திகை தசமி ஒரு திங்கட் கிழமையாக சிவனுக்கு உகந்த நாளில் இது நடைபெற இருக்கின்றது, இதெல்லாம் சாமான்யனால் செய்யபடும் விஷயம் அல்ல, இதெல்லாம் தனி வரமும் அருளும் கொண்ட இருவனால் பிறவிதோறும் தவமிருந்து அழுத ஒருவனால் மட்டும் செய்யபடும் காரியங்கள்.
ஆயிரம் ஆண்டுக்கு பின் தன் முழுவடிவம் பெற்றிருக்கின்றது காசி ஆலயம், மிகபெரிய அச்சுறுத்தலில் இருந்து யார் யாரெல்லாமோ காக்கபட்டு அழியாமல் இருந்த அந்த புண்ணிய ஷேத்திரம் மோடி ஆட்சியில் புது கோலத்துடன் தன்னை மீட்டெடுக்கின்றது, முன்பு 4 பேருக்கு மேல் நிற்கமுடியாதபடி ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த அந்த வளாகம், நந்தி எங்கிருக்கின்றது என தெரியாதபடி மரத்தடி பிள்ளையார் சிலைபோல் ஆகியிருந்த வளாகம் இன்று சுமார் 1 லட்சம் மக்கள் வருமளவு விஸ்தாரமாக்கி வைக்கபட்டிருகின்றது
வீரசிவாஜிக்கு முடிசூட்டிய காகபட்டர் எனும் காசிகரை ஞானி சொன்ன வார்த்தையினை மோடிக்கும் சொல்லி வாழ்த்தலாம், "சிவாஜி நீ உனக்காக வாழாமல் இந்த தர்மத்துக்காகவும் இந்த பாரத கண்டத்தின் எழுச்சிக்குமாக வாழ்ந்ததால் அந்த காசி விஸ்வநாதன் இந்து ஷேத்திரங்களின் அதிபதி எனும் சத்ரபதி பட்டத்தை உனக்கு கொடுக்க உத்தரவிட்டான்.காசி வாழ இத்தேசம் வாழும்,
இந்த இந்து பூமியில் யாரெல்லாம் அந்த புண்ணிய ஷேத்திரத்தை காக்க வந்து தன்னலம் மறந்து நிற்பார்களோ அவர்களும் உனக்கு பின் சேத்திர அதிபதி என்றே அழைக்கபடுவார்கள், காசி விஸ்வநாதன் அந்த அருளை அவர்களுக்கு வழங்குவான், இதனால்தான் உனக்கு மன்னன், அரசன், சக்ரவர்த்தி பட்டம் வழங்காமல் நாம் "ஷேத்திரபதி" எனும் பட்டத்தை வழங்குகின்றோம்
எவனொருவன் காசிக்காய் வாழ்வனோ அவனை சிவன் நடத்துவார் அவனுக்கு தோல்வியே இல்லை காரணம் சிவனுக்குரிய வேலையினை அவன் செய்கின்றான், அவனை சிவன் கவனித்து கொள்வார், காசியினை காக்கும் ஒவ்வொருவனும் உன் வழியில் இனி சேத்திரபதி என அழைக்கபடுவான்"ஆம், மோடி இனி வெறும் மோடி அல்ல, பாரத பிரதமர் மோடியும் அல்ல, அவர் ஷேத்திரங்களின் அதிபதியான "சத்ரபதி" மோடி என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.