தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக கூட்டணி கணக்குகள் மாவட்ட வாரியாக நிலவரங்கள் போன்றவை குறித்து டெல்லி தலைமையிடம் விரிவாக எடுத்து கூறியதாகவும், கூட்டணியை நம்பி இருந்தால் கடைசி நேரத்தில் சீட் கணக்குகளுக்கு நாம் நிற்கவேண்டும் அதே நேரத்தில் இப்போதே நேரடியாக களத்தில் பணியாற்றினால் 15-20% வாக்குகள் பெற முடியும் என கணக்கிட்டு தேசிய தலைமையிடம் விரிவாக எடுத்து கூறி இருக்கிறாராம்.
இந்த நிலையில்தான் டெல்லியில் இருந்து திரும்பியதும் முதல் முறையாக மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை காரசாரமாக பேசி இருக்கிறாராம் அதில்,
குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி பிரதமர் மோடியின் வளர்ச்சி மாடலுக்கு, குஜராத் மாடலுக்கு, குஜராத் மக்கள் வழங்கிய சிறப்பான வெற்றி என்று கூறி அண்ணாமலை, மேலும் குஜராத் தேர்தலில் 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் முதல்வர் பூபேந்திராவிற்கும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். குறிப்பாக தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் 75% வாக்காளர்களுக்கு மேல் பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டளித்து உள்ளனர் என்றும், பிரதமர் மோடி மீது இங்கிருந்து சென்ற தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும், அசைக்க முடியாத பாசத்தையும் நிரூபிக்கிறது என்றும் குஜராத்தில் இந்த வெற்றி 2024 லோக் சபா தேர்தலில் எதிரொலிக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக மீது நாளுக்கு நாள் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும். நாம் மற்ற கூட்டணி கட்சிகளிடம் நான்கு அல்லது ஐந்து தொகுதிகள் எனக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே நகராட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டு மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளோம்.
தேர்தல் வெற்றி தோல்வி என்பது சகஜம், அதைப் பற்றி நாம் கவலை பட கூடாது, கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் தனித்து போட்டியிடுவதற்கு தயாராக்குங்கள் என்று கூறிய அண்ணாமலை மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு 20 சதவிகித ஓட்டுக்களை பெற பாஜகவில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பல பிரபல ஊடகங்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் விமர்கர்கள் பல யூகங்களை டெல்லிக்கு செல்வதற்கு முன்பாகவும் சென்று வந்த பின்பும் சொல்லி வந்த நிலையில் , அண்ணாமலை டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து வந்தபின் இன்னும் வேகமாக திமுகவை பொது மேடைகளில் விமர்சித்தும், பாராளுமன்ற தேர்தலில் 25 சீட்டுகள் இலக்கு என்று கூறி வருவதும்
தமிழக பாஜக அண்ணாமலைக்கு டெல்லி தலைமை , தமிழக பாஜக தலைமையில் 2024 தேர்தலில் தனியாக நிற்க கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவே தெரிகிறது என்று பல மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் பாஜக தொண்டர்களிடம் இப்போதைய பேச்சாக உள்ளது.
பாஜகவிற்கு செக் வைப்பது போன்று பல்வேறு கருத்துக்களை ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்து வந்தது, மெகா கூட்டணியை அமைப்போம் என்றும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசிவந்தது, இந்த நிலையில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாராகி இருப்பது அந்த கட்சிக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதே அளவு அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு மிக பெரிய பாதிப்புகளை சட்ட ரீதியாகவும், ஏஜென்சிகள் ரீதியாகவும் உண்டாகும் என அடித்து கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டணியை காரணமாக வைத்தே பாஜகவிற்கு பொடிவைத்து பேசிய நிலையில் தற்போது மிக பெரிய பதிலடியை கொடுக்க பாஜக தயாராகி இருப்பது அன்னூரில் நடைபெற்ற போராட்டத்தில் குறைந்தது 25 இடங்களில் வெற்றி பெறுவோம் என அண்ணாமலை தெரிவித்ததில் இருந்தே அறிய முடிகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.